TNPSC Current Affairs in Tamil – 17th & 18th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 17th & 18th December 2020

 

டிசம்.16-ல் தா.லலிதா மதுரை உலக தமிழ் சங்க இயக்குநராக பொறுப்பேற்றார்.
வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் சென்னை உயர் நீதிமன்ற ஏ.பி.சாஹி ஓய்வு பெற உள்ளதால் புதிய நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிபதியான சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமனற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

  • சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதிபதியான வினித் கோத்தாரியை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இடம் மாற்ற செய்ய உச்சநீதிமனற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் விவசாயிகள் பேராட்டத்திற்கு தீர்வு காண குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியா 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு பொன் விழா டிசம்.16-ல் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ராஜா சாரி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு நாசா அனுப்ப இருக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
இந்திய வம்சாளியைச் சார்ந்த சித்தார்த் சாட்டர்ஜியை சீனாவிற்கான ஐ.நா. இருப்பிட ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் இடையேயான ஹால்திபரி-சிலாஹதி ரயில் சேவை இரு நாட்டு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். மேலும் இரு நாட்டிற்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்திலில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் சி.எம்.எஸ்-01 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டுகள் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் கண்டெடுக்கப்பட்டன.
டிசம்.17-ல் மங்கோலியாவின் சிசிவாங்கில் சீனாவின் சேஞ்சி-5 விண்கலம் நிலவின் பாறை துகள்களுடன் தரையிறங்கியது. இதனால் 44 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரித்த பட்டியலில் 3வது நாடாக இடம் பிடித்துள்ளது.

  • முதல் இடம் – அமெரிக்கா
  • இரண்டாம் இடம் – ரஷ்யா
மத்திய அரசு யோகா பயிற்சிகளுக்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யெசா நாயக் ஆகியோர் தெரிவித்தனர்.
ரூ.28,000 கோடி செலவில் முப்படைகளுக்கும் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கை அமைப்புடன் கேரள பெண்கள் தொடங்கியுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனமான வித்யுதி எரிசக்தி சேவைகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டிசம்.17-ல் பெங்களூரு செளதாவில் நடைபெற்ற பெங்களூரு தொலைநோக்குத் திட்டம் 2020 தொடர்பான கலந்துரையாடலில் உலகத் தரமான மாநகரமாக பெங்களூரு மேம்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ரூ.4.50 லட்சம் கோடியை 2024-ம் ஆண்டு வரையில் எரிவாயு கட்டமைப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
செர்பிய தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிற உலககோப்பை மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடை பிரிவில் அன்ஷூ  வெள்ளி பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சயித் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ல் தொடக்கம்.

Related Links

Leave a Comment