Tamil Current Affairs – 17th & 18th January 2021

12 காளைகளை அடக்கி விராட்டிபத்து கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்ந வீரராக செயல்பட்டதால் அவருக்கு க்விட் கார் ( Kwid Car) பரிசாக வழங்கப்பட்டது. |
ரூ.1000 கோடி மதிப்புடைய நிதி தொகுப்பு (Startup India Seed Fund) தொழில்முனைவோர்கள் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
- 2016 ஜன.15-ல் புதிய தொழில் நிறுவனம் தொடங்குவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (Startup India Seed Fund) தொடங்கப்பட்டது.
- இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதிய தொழில்களுக்காக பிராரம்ப் ஸ்டார்ட்-அப் இந்தியா சர்வதேச மாநாடு 2021 ஜனவரி 16, 17 ஆகிய தினங்களில் நடைபெற்றது
|
ஜன.17-ல் குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிலுள்ள ஒற்றுமை சிலைக்கு (Statue of Unity) எட்டு இரயில்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்.
- கெடிவாயா – பிரதாப் நகர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரயில் சேவைகள்
- தபோய் – சந்தோத் அகல இரயில்பாதை
- சந்தோத் – கெவாடியா புதிய அகல இரயில்பாதை
ஆகிய வழித்தடங்களில் சீரான இணைப்பை இந்த இரயில்கள் ஒற்றுமை சிலைக்கு வழங்குவன. |
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India) இந்தியாவில் சுகாதார காப்பீட்டின் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த 10 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை குழுவான சுபாஷ் சந்திர குந்தியா குழுவினை (Subhash Chandra Khuntia Committee) அமைத்துள்ளது.
- IRDAI தலைவர் சுபாஷ் சந்திர குந்தியா இந்த குழுவிற்கு தலைமை தாங்குகிறார்
|
1951-52-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் ஷியாம்சரண் நேகி முதல் நபராக வாக்களித்தார். இவர் ஜன.18-ல் நடைபெற்ற இமாச்சல பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்ததன் இவர் பெயர் காரணமாக செய்திகளில் வந்துள்ளது |
இன்று (ஜன.18) முதல் பசுவதை தடைச்சட்டம் கர்நாடகத்தில் அமலுக்கு வருகிறது. |
விவசாய சீர்திருத்தங்களுக்காக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனை இந்திய வேளாண் சட்டங்கள் கொண்டு உள்ளன என சர்வதேச நிதியம் பாராட்டியுள்ளது. |
கரோனா தடுப்பூசியானது கோவின் செயலியில் (Co-WIN App) பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. |
ஜன16-ல் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ராேலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் (Petroleum Conservation Research Association (PCRA)) சாக்ஷம் (SAJSGAN) என்ற பெயரிலான பசுமையான மற்றும் தூய்மையான எரிசசக்தி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நோக்கில் உருவாக்கியுள்ளது.
- மாதம் ஒரு முறை நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் கரியமில தடங்கள் அதிகரிப்பதால் உருவாகும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உருவாக்கும் விதத்தில் விளக்கப்படும்.
|
உலகளாவிய விமானநிலையங்களிலேயே கேரளாவின் கொச்சி விமான நிலையம் தன் பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை மிதக்கும் சூரியமின் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்து கொள்கிறது.
- இத்திட்டம் 2015 முதல் செயல்பட்டு வருகிறது.
|
TEPC – (Telecom Equipement and Services Export Promotion Council) கவுன்சிலின் தற்போதைய தலைவர் சந்தீப் அகர்வால் உள்ளார். |
ஐ.நா. வெளியிட்டுள்ள சர்வதேச இடம்பெயர்வு 2020 அறிக்கையில் 1.8 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 இலட்சம் பேரும், அமெரிக்காவில் 27 லட்சம் பேரும், சவூதி அரேபியாவில் 25 லட்சம் பேரும் வாழ்கின்றன.
- குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்டியிலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
- இந்த பட்டியலில் மெக்ஸிகோ, ரஷ்யா, சீனா, சிரியா போன்ற நாடுகள் இந்தியாவை தொடரந்து இடம்பிடித்துள்ளன.
|
2021 ஜூன் 11-13 வரை தென்மேற்கு இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கு கொள்ளுமாறு பிரிட்டன் அழைத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரிய நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது |
ஜன.13-ல் ஈஸ்டோனியா பிரதமர் ஜீரி ராதாஸ் பதவி விலகினானர். |
உகாண்டாவின் தற்போதைய அதிபர் யோவோரி முசேவனி அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். |
ரஷ்யா பிறநாடுகளின் வான்பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
- 2002 திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.
- மே-2020-ல் அமெரிக்கா இந்த ஒப்பந்ததில் இருந்து விலகியது
|
மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு (Ministry of Tribal Affairs) மின்னாளுகைக்கான ஸ்கோச் சாலஞ்சர் விருது (SKOCH Challenger Award” – Best Performance in e-Governace) வழங்கப்பட்டுள்ளது. |
பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு வெளிப்படையுடன் தன்மையுடன் கூடிய சிறந்த ஆளுகையை வழங்கியதற்கான ஸ்காச் சாலஞ்சர் விருது (SKOCH Challenger Award) வழங்கப்பட்டுள்ளது. |
பழம்பெரும் நடிகர்-இயக்குநர் பிஸ்வஜித் சார்டர்ஜிக்கு (Biwajit Chatterjee) கேவாவில் நடைபெறும் 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியருக்கான விருது (Indian Personality of ther Year Award) அறிவிக்கப்பட்டுள்ளது. |
16th January Current Affairs – Read Here
Related Links
Related