TNPSC Current Affairs in Tamil – 17th March 2023

Current Affairs One Liner 16th March 2023

  • 18.12.2021-ல் தொடங்கிய “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் இதுவரை 1.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • மார்ச் 18-ல் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனால் துபாயில் நடைபெற உள்ள 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடங்கி வைக்கபட உள்ளது.
  • புலிகளை வேட்டையாடிவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்து விடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
    • வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972
    • புலிகள் பாதுகாப்பு சட்டம் – 1973
    • இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன.
    • தேசிய அளவில் புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் 6வது இடம் பிடித்துள்ளது.
    • 2018 கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் இந்தியாவில் உள்ளன.
  • மார்ச் 16 கொச்சியில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்கப்பலான ஜஎன்எஸ் விக்ராந்த்-ஐ பார்வை இட்டார்.
    • ஐஎன்எஸ் துரோணாச்சாரியா கப்பல் படைதளத்துக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்.
  • தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தக் வலியுறுத்தினர்.
    • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-370 2019-ல் நீக்கப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • தலைமைத் தேர்தல் ஆணையர் – ராஜீவ் குமார்
    • பதவிக்காலம் – 15-05-2022 முதல் 2025 பிப்ரவரி
  • வேளாண்மைக்கு புத்துயிர் தரும் வகையில் சில மாநிலங்கள் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகின்றன.
    • வேளாண்மை மாநிலப்பட்டியலில் உள்ளது
    • இந்தியாவிலேயே முதன் முதலாக வேளாண்மைக்கு கர்நாடாக மாநில அரசு (2011-12) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
    • இதற்கு பின் ஆந்திரப்பிரதேசம் (2013-14), தமிழ்நாடு (2021-22) ஆகியவை வேளாண்மை நிதி அறிக்கையில் இணைந்துள்ளது.
    • தேசிய அளவிலான 10வது வேளாண் கணக்கெடுப்பின்படி (தமிழ்நாட்டில் 70% மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மை இருந்து வருகிறது.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் (டிசிஎஸ்) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கே.கிருதிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மலேசிய நாட்டின் “ஷாங்கி விமான நிலையம்” உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
    • இதனை ஸ்கைடிராக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
    • 2வது இடம் – தோஹா விமான நிலையம்
    • 3வது இடம் – ஹனீடா விமான நிலையம் (டோக்கியா)
    • 36வது இடத்தை தில்லி இந்திராகாந்தி விமான நிலையம் பிடித்துள்ளது.
  • ஸ்வீடனின் ஸ்டோக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள “ஆயுத இறக்குமதி”-யில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • IQAir நிறுவனம் வெளியிட்டுள்ள “மாசுபட்ட நாடுகள்” பட்டியலில் இந்தியா 8வது இடம் பிடித்துள்ளது.
    • 2வது இடம் – ஈராக்
    • 3வது இடம் – பாகிஸ்தான்
    • 4வது இடம் – பக்ரைன்
    • 5வது இடம் – வங்கதேசம்
  • தங்கக் கடத்திலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
  • 1வது இடம் – கேரள மாநிலம்
  • 3-வது மகாராஷ்டிரம்
  • “பயங்கரவாத நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு”களின் பட்டியலில் “ஆப்கானிஸ்தான்” முதலிடம் பிடித்துள்ளது.
    • குளோபல் டெடரிசம் இன்டக்ஸ் ஆய்வறிக்கையின்படி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Comment