TNPSC Current Affairs in Tamil – 18th March 2023

Current Affairs One Liner 18th March 2023

  • மார்ச் 17-ல் சென்னையில்  நடைபெற்ற தமிழ் மரபு பரப்புரை நிழச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தில் சுமார் 51.4%பேர் உயர்கல்வி பயில்கிறார்கள்.
    • பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப் பெண் திட்டத்தில் (05.09.2022)  மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
  • “சூரயவம்சம்” என்ற தன்வரலாற்று நூலுக்காக “சரஸ்வதி சம்மான் விருது” பெற்ற மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    • “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” நான்கு தொகுதிகள் கொண்ட தமிழ், ஆங்கில நூல்களின் மறுபதிப்பை தனியொருவராக தொகுத்துள்ளார்
  • விருதுநகர் மாவட்டம் மித்ரா பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
  • தமிழக காவல் துறையில் பெண் காவலர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி “மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு” என்ற பெயரில் சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடைபெற்றது.
    • தமிழக முதல்வர் “அவள்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • 1973ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவலர் உதவி ஆய்வாளர், பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கருணாநிதி பிறப்பித்தார்.
  • பெண் காவலர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் கருணாநிதி நினைவாக, கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் வழங்கப்படும். மேலும் “காவல் துறையில் பெண்கள்” எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • சென்னை பெருநகர காவல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் “அவள்” திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பிரதமரின் “ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்” (பிஎம் மித்ரா) திட்டத்தின் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் “மெகா ஜவுளி பூங்காக்கள்” அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    • தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ.4,445 கோடி மதீப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஜவுளி பூங்காவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 லட்சம்  வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
  • 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகதிம் 6%மாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  •  “எர்னி” எனும் மென் பொருளை சாட்ஜிபிடிக்கு போட்டியாக சீனா அறிமுகம் செய்துள்ளது.
  • “கேலோ இந்தியா” விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 137 விளையாட்டு வீரர்கள் மொத்தமாக 69 பதக்கங்கள் வென்றனர்.
    • 2020ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 25 வரையில் ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான சதுரங்க போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை பி.வி.நந்திகா, ஆர்.வைஷாலி ஆகியோர் பெற்ற்னர்.
  • ஹாக்கி இந்தியா அமைப்பின் “2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்” விருதை “மிட்ஃபீல்டர் ஹார்திக் சிங்”-கும், “சிறந்த வீராங்கனை விருதை” “கோல் கீப்பர் சவீதா புனியா”-வும் வென்றனர்.
    • தமிழக வீரர் “கார்த்தி செல்வத்துக்கு” அறிமுக ஆட்டத்திலேயே கோலடித்தற்கான விருதும் ரூ.1லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
    • 1964 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கயில் தங்கம் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த “குருபக்ஸ் சிங்”-கிற்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
    • சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதை உத்தம சிங்கும், சிறந்த வளர்ந்து வரும் வீராங்களை விருதை மும்தாஸ் கானும் பெற்றனர்.

Leave a Comment