Tamil Current Affairs – 18th November 2020
ஸ்வீடன் நாட்டின் “இளவயது கண்டுபிடிப்பாளருக்கான விருது” திருவண்ணாமலையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான வினிஷா உமா சங்கர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்தற்காக அறிவிக்கப்பட்டது, |
தேசிய தண்ணீர் விருதுகள் 2019-ன் முதல் பரிசை இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு – கரும்பு இனப்பெருக்க நிறுவனம் – கோயம்புத்தூரை சார்ந்த விஞ்ஞானிகள் வென்றனர். |
தேசிய அனல் மின் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எரிசாம்பலில் இருந்து ஜியோபாலிர் கற்கள் எனும் கட்டுமானத்துக்கு உபயோகப்படுத்துப்படும் கற்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. |
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் உயர்தர பெட்ரோலான “பவர் 99” அறிமுகம் செய்து வைத்தார். |
உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாரம்பரிய மருத்துவ தொடர்பான ஆராய்சிகளில் ஈடுபடுவதற்காக சர்வேதச மையத்தை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அறிவித்தார். |
உலக சுகாதார அமைப்பு உத்திரப்பிரதேச அரசுக்கு கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. |
கேப்டன் பர்கத் சிங், மிர் ரஞ்சன் நெகி, குர்பகஸ் சிங் ஆகியோர் அனைத்து வயதினருக்கான “மாஸ்டர் ஹாக்கி” விளையாட்டை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் |
ஒடிசா மாநிலம் சண்டீபூரில் தரையிலிருந்து வானில் உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் துரித எதிர்வினை ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏம்) இரண்டாம் முறை நடந்த பரிசோதனை வெற்றியடைந்தது. |
கடந்த ஒரு வாரத்திற்குள் பெருநாட்டின் 3வது புதிய அதிபராக ஃபிரான்சிஸ்கோ சகாஸ்டி (76) தேர்வு |
மத்திய அரசுடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) தமிழக கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது. |
அமெரிக்க ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழம் வெளியிட்ட உலகளவிலான சிறந்த விஞ்ஞானிகள் பட்டியிலில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த விஐடி பல்கலை கழகத்தின் 10 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளன. |
தமிழ் பதிப்பாளரான க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் காலமானர் |
Related Links