18th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 18-10-2020

தமிழக நிகழ்வுகள்

  • சாயல்குடியில் தமிழ்பெயர் கொண்ட 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு.
  • இந்தியாவில் முதன்முறையாக 2500 அடி ஆழம் வரை துளையிடக்கூடிய நவீன ரிக் வாகனம் திருச்செங்கோட்டில் நேற்று அறிமுகம்.




தேசிய நிகழ்வுகள்

  • உத்திர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் “மிஷன் சக்தி” திட்டம் தொடக்கம்
  • மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லாவின் பதவி காலத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 22, 2021 வரை நீடித்துள்ளது.
  • ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பிடம் கடந்த 2019-20-ல் மத்திய அமைச்சர், மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக 1,427 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல்
  • உத்திரபிரதேச அரசு “பாதுகாப்பான நகரத் திட்டம்” என்ற தலைப்பின் கீழ் 180 நாட்களுக்கு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது.
  • தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் (என்சிடிசி) மூலம் சுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.10,000கோடி சுகாதார பராமரிப்பு நிதி வழங்கப்பட உள்ளது.
  • ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் கணபதி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் திரவ அணுக்கழிவை பாதுகாப்பாக வெளியேற்றும் முறையை கண்டுபிடித்தார்.
  • இந்துஸ்தான் துத்தநாகம் லிமிடெட் உலகின் மிகப்பெரிய துத்தநாக ஸ்மெல்டரை அமைக்க குஜராத்தில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய உள்ளது
  • கால சமஸ்கிருத விகாஸ் யோஜனா என்ற மத்திய துறை திட்டத்தின் கீழ் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஐ.ஐ.டி டெல்லி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்.17 அன்று கையெழுத்திட்டது
  • சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்டவற்றில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் கிராண்ட் சேலஞ்சர்ஸ் வருடாந்திர கூட்டம் அக்டோபர் 19முதல் 21 வரை நடைபெற உள்ளது
  • நீட் தேர்வு முடிவில் சண்டிகர் மாநிலம் 75.64 தேர்ச்சி அடைந்து முதல் இடத்தையும், 2வது இடத்தில் டெல்லியும், 3வது இடத்தில் அரியானா மாநிலமும் பிடித்துள்ளன. தமிழ்நாடு 15வது இடத்தை பெற்றுள்ளது.
  • குளோபல் கங்கர் இண்டெக்ஸ்-ன் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் இந்தியா 94-வது இடத்தையும், பாகிஸ்தான் 88-வது இடத்தையும், வங்கதேசம் 75–வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக பிரதமாகிறார்.
  • அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய வேலைகள்



3 thoughts on “18th October 2020 – Current Affairs in Tamil | One Liner”

Leave a Comment