Tamil Current Affairs – 19th & 20th November 2020
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் (நவம்.19) 103வது பிறந்த நாள் விழா. |
ஜான்சிராணி லட்சுமிபாய் பிறந்த தினம் (நவம்.19). |
இந்தியா அரசு சர்வதேச லஞ்ச குறியீட்டில் 77-வது இடத்தை பிடித்துள்ளது. |
பெங்களூருவில் ஐ.டி. மாநாடு நவம் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது. |
சோதனையின் போது சீனாவில் உருவாக்கப்பட்ட “கரோனாவாக்” தடுப்பூசியின் செயல்திறன் திருப்தியாக உள்ளெதன ஆய்வுகள் தெரிவிக்கிக்கிறது. |
30,800 நிறுவனங்கள் பணியாளர் சேமநில நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) பதிவு பட்டியலில் இருந்து பொருளாதார பாதிப்பு எதிரொலி காரணமாக வெளியேறிவிட்டன. |
வரலாற்று கடன் ஒப்பந்தத்தை கொரானாவினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கா உதவ ஜி-20 அமைப்பு உருவாக்கியுள்ளது. |
உலகில் மிக உயரமான இளைஞன் என்ற சாதனை படைத்த சீனாவைச் சார்ந்த சிறுவன் ரென் கியூ (7அடி 3 அங்குலம்) கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான். |
பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கராச்சி கிங்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. |
மிருதுளா சின்ஹா (கோவா முன்னாள் ஆளுநர்) மறைவு. |
ரஷ்ய தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி (79) காலமானார். |
உலக ஆண்கள் தினம் (நவம்.19) |
உலக கழிப்பறை தினம் (நவம்.19) |