Tamil Current Affairs – 19th December 2020
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் தமிழக தகவல் ஆணையம் 2வது இடத்தில் உள்ளதென மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமார் தெரிவித்துள்ளார். |
கடந்த 4 வருடங்களில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.9,200 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதென முதல்வர் தெரிவித்துள்ளார். |
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை தேசிய பசுமை தீர்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. |
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக ஊடக தளம் நடத்திய ஆய்வில் 70% இந்தியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. |
கார்களில் உயிர் காக்கும் ஏர்பேக் முன் இருக்கை பயணிகளுக்கு கட்டாயம் என்ற சட்டம் விரைவில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. |
எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அடுத்த மாதத்தில் (ஜனவரி-2021) தேசிய வரைவு ரயில்வே திட்டம் (என்ஆர்பி) அறிவிக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார் |
உடற்பயிற்சி, விளையாட்டு, உடல் ஆரோக்கியத்தின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட “ஃபிட் இந்தியா” இயக்த்தில் அனைத்து தமிழக பள்ளிகளும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது
|
ஜிபிஎஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை பயன்பாட்டுக்கு வர இருப்பதன் காரணமாக வரும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லா இந்தியா உருவாக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக பூர்வகுடியைச் சார்ந்த டெர்போ ஹாலண்டை ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. |
ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதென மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். |
தில்லி சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலரும், துணைத் தலைவருமான புலவர் விஸ்வநாதன் (89) காலமானார். |