TNPSC Current Affairs in Tamil – 19th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 19th January 2021

காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் பல்கீஸ் என்ற மூதாட்டிக்கு குடியுரிமை சட்டத்தினை எதிர்த்து போராயடிதற்காக “காயிதே மில்லத் விருது 2020” வழங்கப்பட உள்ளது.
சமூக ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தலைமையிலான கார்வானே மொஹப்பத் (அன்புக்கான வாகனம்) அமைப்பிற்கு காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் நேர்மைக்கான 2020-ம் ஆண்டின் காயிதே மில்லத் விருது வழங்கப்பட உள்ளது.
ஜன.29 வரை தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்கம் சாரபில் வழங்கப்பட உள்ள நற்றமிழ்ப்பாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்விருது  மரபு கவிதை படைக்கும் கவிஞர் ஒருவருக்கும், புதுக்கவிதை படைக்கும் ஒருவருக்கும் வழங்கப்பட உள்ளது.

ஜன.29 வரை தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில் வழங்கப்படும் தூய பற்றாளர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

  • மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 37பேருக்கு விருதும், பரிசுத்தொகையாக ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய அளவில் விபத்துக்களை கட்டுப்படுத்துவதில் தமிழகத்திற்கு சிறந்த மாநில விருதினை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வழங்கினார்.
29மிக், 12 சுகாய் போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும். 

ஏற்கனவே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நான்கே மாதத்தில் காலாட்படை பள்ளி மற்றும் டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு 9மி.மீ மெஷின் பிஸ்டல் அஸ்மி-யை உருவாக்கியுள்ளது.
ஜன.18-ல் குஜராத்தின் அகமதாபாத்தில் 2வது கட்டமாக ரூ.5,384 கோடியிலும், சூரத் நகரில் ரூ.12,020 கோடியிலும் தொடங்கப்பட உள்ள மெட்ரோ இரயில் நிலைய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

மெட்ரோ இரயில் பாதை இந்தியா முழுவதும் 27 நகரங்களில் 1000 கிமீ தொலைவுக்குள் அமைக்கப்பட்டு வருகிறது என மோடி தெரிவித்துள்ளார்.

ஜன.25 முதல் 29 வரை உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum (WEF)) சார்பில் நடத்தப்படும் டாவோஸ் செயல் திட்ட மாநாட்டில் (Davos Action Plan Conference) பிரதமர் மோடி, சீன அதிபர் பங்கேற்க உள்ளனர்.
உலக தலைவர்கள், தனியார் நிறுவன தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார அமைப்பின் (World Economic Forum (WEF)) உச்சி மாநாடு 2021 மே.13 முதல் 16 வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
ஜன.18-ல் மத்திய ரிசர்வ் காவல் படையிடம் (Central Reserve Police Force) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (Center for Defense Research and Development) உருவாக்கிய 21 பைக் ஆம்புலன்ஸ் (Bike Ambulance) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் சர்க்கரை உற்பத்தி 142.70 லட்சம் டன்னாக  உள்ளதென சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
சீனா அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 4.5 கிமீ தூரத்தில் சுபன்ஸ்ரீ மாவட்டம், சாரி சூநதிக்கரையோரம் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளது. இது செயற்கைகோள் புகைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்திலிருந்து அமெரிக்க நாடாளுமனற மேலவையான செனட் சபையின் உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கமலா ஹாரிஸுகக்கு பதிலாக ஜனநாயக கட்சியின் அலெகக்ஸ் படில்லா பவர் நியமிக்கப்பட உள்ளார்.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீஜே யாங் தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்த்தில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ல் சீன பொருளாதாரம் 2.3% வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. 45 ஆண்டுகளுக்கு பிறகு சீனா பொருளாதாரம் மிக குறைந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
இன்று (ஜன.19) தொடங்க உள்ள டொயோடா தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னாநெவால், ஸ்ரீகாந்த், காஷ்யப் உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்கின்றனார்.
நாட்டில் மாவட்டங்கள் அளவில் 1000 விளையாடு இந்தியா மையங்களை தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

17th & 18th January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment