TNPSC Current Affairs 19th November 2023
Here are the one-liner current affairs for November 19th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
தமிழக சட்டப்பேரவை
- தமிழக சட்டப்பேரவையானது ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள 10 மசோதாக்களை நிறைவேற்றி ஒப்புதலை பெற அனுப்பி வைத்துள்ளது.
தமிழகத்தின் பொருளாதாரம்
- தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இணையதளம்
- மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பனை செய்ய மதி சந்தை இணையதளத்தினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
- இதற்கான முகவரி www.mathisandhai.com
- தமிழக அரசு செயல்படுத்தும் மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்படும் முற்றம் மாத இதழக்கான முற்றம் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
எஸ்.வெங்கடரமணன்
- 1990-1992 காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக செயல்பட்ட எஸ்.வெங்கட்ரமணன் தனது 92 வயதில் காலமானார்.
- 1985 முதல் 1989 வரை மத்திய நிதித் துறை செயலாரக பணியாற்றியுள்ளார்.
- கர்நாடகா மாநில அரசின் ஆலோசகராவும் விளங்கியுள்ளார்.
National Current Affairs
இந்தியா – யூனிகார்ன் தரவரிசை
- இந்தியாவானது உலகளாவிய யூனிகார்ன் தரவரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
- இந்தியாவில் 72 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன.
உத்திரபிரதேசம்
- உத்திரபிரதேசத்தில் ஹலால் முத்திரையிட்ட பொருள்கள் விற்பனைக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆசியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் பட்டியல்
- 2024-ம் ஆண்டில் ஆசியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் பட்டியலில் கொச்சி நகரம் (கேரளம்) முதலிடத்தை பெற்றுள்ளது.
International Current Affairs
ஸெய்னனிஸ் பாலசியோஸ் (Nicaragua’s Shenice)
- நிகரகுவா நாட்டினைச் சேர்ந்த ஸெய்னனிஸ் பாலசியோஸ் (Nicaragua’s Shenice) 2023-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை (Miss Universe) வென்றுள்ளார்.
- இவர் நிகரகுவா நாட்டின் முதல் மிஸ்யுனவர்ஸ் ஆவார்
Sports Current Affairs
மெழுகு சிலை
- ஜெய்ப்பூர் மெழுகு அருங்காட்சியகத்தில் விராட்கோலியின் 50வது சதத்தின் நினைவாக மெழுகு சிலையானது அமைக்கப்பட உள்ளது.
Important Days and Dates –19th November 2023
உலக ஆண்கள் தினம் (World Men’s Day) – Nov 19
தேசிய ஒருமைப்பாடு தினம் (National Integration Day) – Nov 19
உலக கழிப்பறை தினம் (World Toilet Day) – Nov 19
–> More Days