Tamil Current Affairs – 1st & 2nd December 2020
தமிழகத்தில் முதல் முதலாக தூத்துக்குடி ஊர்காவல்படைக்கு திருநங்கைகளான லட்சயா, ஸ்ரீஜா தேர்வு. |
தமிழக நூலகத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கடப்பேரியிலுள்ள நூலகத்தின் நூலகர் தி.சுந்தமூர்த்திக்கு “நல்நூலகர் விருது” அறிவிக்கப்பட்டது. |
திருப்போரூர் நூலக வாசகர் வட்டத்திற்கு “நூலக ஆர்வலர்” விருதினை தமிழக நூலகத் துறை அறிவித்துள்ளது. |
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிகாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். |
சுழல் நிதியாக ரூ.16 கோடி நிதியை 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்காக ஒதுக்கிடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. |
2018 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழக கரிகாற்சோழன் விருது 3 எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது
|
வங்க கடலில் உருவான பயுலானது 4-ம் தேதி குமரி – பாம்பன் இடையில் கரையை கடக்கிறது. இப்புயலிற்கு மாலத்தீவு “புரவி” என்று பெயர் சூட்டியுள்ளது. |
மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பணபரிமாற்றம் (டிபிடி) ஆகியவற்றால் கிராமப்புறங்களில் ஏடிஎம்.களை பயன்பாடு அதிகரித்துள்ளது. |
இந்திய தலைநகரான தில்லி உலக காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் 229 நுண்துகள் குறியீட்டுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. |
பாகிஸ்தானின் ஒற்றை யானை என அழைக்கப்படும் “காவன்” கம்போடியாவில் கொண்டு விடப்பட்டது. |
சென்னை ஐஐடி இளம் தொழில் முனைவோர் மாற்றுத்திறனாளிகளுக்காக வசதிகளுடன் கூடிய நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளனர். |
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக இந்தியன் வங்கி இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் (சிட்பி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. |
ஆழ்கடல் நீச்சல் வீரர், பயிற்சியாளர் அரவிந்தன் தலைமயிலான குழு புதுச்சேரி கடல் பகுதியில் அரியவகை கொம்பு திருக்கை மீன்களை புகைப்படம் எடுத்துள்ளனர். |
எதிரி கப்பல்களை அழிக்கும் (300கி.மீ தூரம் வரை) பிரம்மோஸ் ஏவுகணை சோதனை அந்தமான் நிகோபர் தீவுகள் பகுதியில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. |
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்டெஃபானி ஃப்ராப்பார்ட் என்ற பெண்மணியை முதல் முறையாக கள நடுவராக ஐராேப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நியமித்துள்ளது. |
ஈரான் அணு சக்தி மையங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை ஈரான் தன் நாடளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. |
செப்டம்பர் வரை 1433 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கபட்டுள்ளன என மத்திய அமைச்சர் பியூஸ்கோல் அறிவித்துள்ளார். |
வளர்ந்து வரும் இளம் திறமையார்களை கெளரவிக்கும் பாஃபாதா (பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்) அமைப்பின் முன்னெடுப்பு தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். |
மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் பக்ரைன் பார்முலா-1 கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார். |
2020, நவம்பர் மாத சரக்கு-சேவை வரி தமிழகத்தில் ரூ.7,084 கோடியும், இந்திய அளவில் ரூ.1,04,963 கோடியும் வசூலாகியுள்ளது. |
மக்களவையின் புதிய தலைமைச் செயலாளராக உத்பல் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி -9 சதவீதமாக இருக்குமென சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்துள்ளது. |
ஆஸ்திரேலிய ராணுவத்தின் உயரிய விருதான க்டோவிரியா கிராஸ் விருதினை முதல் கடற்படை வீரர் பெட்டி ஷியான் ஆவார். |
மேகாலயா மாநிலத்தின் மின் விநியோகத் துறையினை சீரமைக்க மத்திய அரசிற்கும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே 132.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் ஒப்பந்தம் (டிசம் -1) கையெழுத்தானது. |
மகாராஷ்டிரா இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 100-வது இயற்கை எரிவாயு நிலையத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார். |
வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து 40-வது 6,000 குதிரை திறன் கொண்ட மின்சார இரயில் எஞ்சினை ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் துவக்கி வைத்தார். |
அஸ்ஸாம் அரசு தன் மாநிலத்தில் 29 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் வீட்டின் பெண் தலைவரின் வங்கி கணக்கில் ரூ.830-யை செலுத்த “ஒருநோடி திட்டம்” என்ற திட்டத்தினை தொடங்க உள்ளது. |
மத்திய அரசு “தாய் மங்கூர் (Thai Mangur)” என்ற வளர்ப்பு மீன் வகைகளுக்கு தடை செய்துள்ளது. |
நாகலாந்தில் 10 நாள் வருடாந்திர கலாச்சார விழாவான ஹார்ன்பில் திருவிழா (பண்டிகைகளின் திருவிழா) டிசம்.1 முதல் 5வரை நடைபெறுகிறது. இத் திருவிழாவின் ஆரம்ப நாளான டிசம்.1 நாகலாந்து மாநில தினத்தை குறிக்கிறது. |
இந்திய அரசு பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதற்கான உச்ச குழுவை (Apex Committee for Implementation of Pairs Agreements (AIPA))அமைத்துள்ளது. |
கேம்பிரிட்ஜ் அகராதியில் 2020-ல் அதிகமாக தேடப்பட்ட வார்த்தையாக “தனிமைப்படுத்தல்” என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உதவிகள் வழங்கும் “டிஓபிஎஸ்” திட்டத்தில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
|
எல்லை பாதுகாப்பு படையினரின் எழுச்சி தினம் (டிசம்-1) |
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் (டிசம்-1)
கருப்பொருள் : Global Solidarity and Shared Responsibility |