சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியாக பணியாற்றிய “சஞ்ஜிப் பேனர்ஜி” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய தலைமை நீதிபதி – AP சாஹி
தமிழக மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரனை தலைமை செயலாளர் கே.சண்முகம் நியமனம் செய்தார்.
முந்தைய தலைவர் – துரை ஜெயச்சந்திரன் (பொறுப்பு) – மீனாகுமாரி
நாளை முதல் (ஜன.2) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கரோனாே தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
டிசம்பர் 28 மற்றும் 29 -இல் முதல் சுற்று ஒத்திகை ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்குசிறப்பு காலமுறை ஊதியம் (ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை) நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர்சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு (2022 ஜனவரி 24 வரை) மத்திய அரசு நீடித்துள்ளது.
கிழக்கு இரயில்வே பொது மேலாளராக பணியாற்றிய சுனீத் சர்மாஇரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.
“2020-ம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது” இரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் இடையேயான சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்த பிரெக்ஸிட் (BREXIT) வர்த்தக ஒப்பந்த மசோதா பிரிட்டன் நாடளுமன்றத்தில் நிறைவேறியது.
பிரிட்டன் அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து டிசம் 31 நள்ளிரவுடன் முழுமையாக வெளியேறியது.
விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதை கட்டுப்பத்துவதற்காக Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும், கியோட்டோ பல்கலைகழகமும் இணைந்து 2023-ம் ஆண்டில் மரத்தாலான முதல் செயற்கைகோளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது
61% பெண்கள் ஜோ-பைடன் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது வெள்ளை மாளிகையில் புதிய வரலாறாக கருதப்படுகிறது