நவம்பர் 1, தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது (முதல் முறையாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது)
தமிழக வேளாண்துறை அமைச்சர் ரா. துரைக்கண்ணு உடல்நிலை பாதிப்பால் நேற்று காலமானார்.
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாள் விழா குஜராத்தின் கெவதியா நகரில் அக்-31 அன்று கொண்டாடப்பட்டது.
படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடந்த 2014 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்தார்படேல் பிறந்தநாள் விழா உரையில் பிரதமர் மோடி, மகாகவி பாரதி எழுதிய எங்கள் நாடு என்ற பாடலின் முதல் எட்டு வரிகளை (இமய மலையெங்கள் மலையே மாநில மீதது…) மேற்கோள் காட்டி பேசினார்.
குஜராத்தின் கெவதியா – சபர்மதி இடையே இந்தியாவின் முதல் நீர்வழி விமானசேவையை (Sea Plane) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்ற அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல், சஞ்ஜீத் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்ஸோ சோனிகோவிடம் தோல்வி கண்டாா்.