Tamil Current Affairs – 20th December 2020
பொங்கல் தொகுப்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என சேலத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் தெரிவித்தார். |
இந்திய வம்சாவளியரான வேதாந்த் படேல் வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை தொடர்புத்துறை உதவி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். |
இந்தியா மற்றும் பிரிட்டன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். |
மேற்கு வங்கத்தில் 2 வாரங்கள் நடத்திய 10,000 அரசு சேவை மூலமாக ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
டிசம்.14-ல் தொடங்கிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் (அசோம்செம்) நூற்றாண்டு விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த நிறுவன விருதை டாடா நிறுவனம் பெற்றது. |
400 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் அரிய நிகழ்வான “கோ-ஜங்ஷன் எனப்படும் பூமி, வியாழன், சனி ஆகிய கோள்கள் நேர்காேட்டில் சந்திக்கும் நிகழ்வு நாளை (டிசம்.21) அன்று நடைபெற உள்ளது. |
ஐனவரி 16 முதல் 25 வரை நடைபெற உள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் இருந்து திரையிட “அசுரன்” “தேன்” என்ற படங்கள் தேர்வாகியுள்ளன. |
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைத்த ஏ.டி.ஏ.ஜி.எஸ் (Advanced Soviet Artillery Gun System) பீரங்கி ஒடிசாவின் பாலசோர் சோதனை தளத்தில் நேற்று (டிசம்.19) சோதனை செய்ப்பட்டது. |
டிசம்.19-ல் கோவாவின் 60-வது விடுதலை தினம் கொண்டாடப்பட்டது. |
அமெரிக்க சந்தைகளில் கொழுப்பை குறைக்க உதவும் மருந்துகளை விற்பனை செய்ய அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (யுஎஸ்எஃப்டிஏ) அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. |
சீன சாங்கி-5 விண்கலம் 1.73 கிலோ கற்களை நிலவிலிருந்து கொண்டு வந்துள்ளது. |
அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனோ தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு மருந்து ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. |
இந்தியாவின் அமித் பாங்கல் உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டியில் 52கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
மேலும்
|
சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் (டிசம்.20). |