TNPSC Current Affairs in Tamil – 20th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 20th January 2021

ஜன.19-ல் சென்னை அடையாறு மருத்துவமனை தலைவரும், பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணருமான நாட்டின் முதல் பெண் மருத்துவர் வி.சாந்தா காலமானார். சென்னை அடையாறில் மருத்துவனை தொடங்க காரணமானவர்

இவருக்கு வழங்கப்பட்ட விருதுகள்

 • 1986-ல் பத்மஸ்ரீ விருது
 • 1997-ல் ஐஏஆர்சி விருது
 • 2002-ல் மல்லானா விருது
 • 2005-ல் ரமோன் மகசேசே விருது
 • 2006-ல் பத்ம விபூஷன் விருது
 • 2013-ல் தமிழக அரசின் அவ்வையார் விருது
பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் முதலிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளதென மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜன.20 முதல் ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டு நல உதவித்திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் துறை இணை அமைச்சரான ஸ்ரீபாத் நாயக் கர்நாடக மாநிலத்தில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு தற்காலிமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜன.23-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய துணை ராணுவப் படையினருக்கான ஆயுஷ்மான் சுகாதார திட்டத்தை  தொடங்கி வைத்தார்.

இதில் கீழ்கண்ட படை வீரர்கள் இணைக்கப்பட உள்ளன

 • மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF))
 • எல்லை பாதுகாப்பு படை (Border Security Force (BSF))
 • மத்திய தொழிலக பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF))
 • இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBB)
 • சந்திர சீபாபால் (SSB)
 • அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை (Assam Rifles Force)
ஐனவரி 20 முதல் 24 வரை இந்திய விமானப்படை மற்றும் பிரான்ஸ் வான் மற்றும் விண் படை இணைந்து கூட்டு விமானப் பயிற்சியை டெசர்ட் நைட் – 21 (பாலைவன வீரன் – Exercise Desert Knight-21) என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் ஒத்திகை மேற்கொள்கின்றன.

 • பிரான்ஸிருந்து ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றன
 • இந்தியாவின் விமானப்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாகஸ் மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன
பிரதமர் மோடி குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 • சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 • சோம்நாத் அறக்கட்டளையின் முதல் தலைவராக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வகித்துள்ளார்.
லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ், டீல்ரூம்கோ ஆய்வு நிறுவனங்கள் இணைந்த நடத்திய ஆய்வில் உலகில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூர் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை 6வது இடத்தில் உள்ளது.
ஜன.19-ல் புது தில்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் (Committee on Farm Laws appointed by Supreme Court) முதற்கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜன.19-ல் மத்திய அரசு அரசு அல்லாத 28 உறுப்பினர்களை தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுக்கு (National Startup Advisory Council) நியமித்துள்ளது.
பவானாகாந்த் குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற உள்ளார்.

2016-ல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட் பெண் போர் விமானிகளான அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகியவர்களுடன் இவரும் ஒருவராவர்.

ஜன.14-ல் சண்டிகரிலிருந்து ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்ட ஹிசார் விமான நிலையத்திற்கு இந்தியாவின் முதல் விமான டாக்ஸீ சேவை  இந்திய அரசின் “உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்”பிராந்திய  இணைப்பு திட்டத்தின் கீழ் (Regional Connectivity Scheme – Ude Desh Ka Aam Nagrik (RCS-UDAN))  தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சார்ந்த சுரிநாம் அதிபர் சந்திரகா பெர்சாத் சந்தோகி 2021-ம் ஆண்டின் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் (WHO Executive Board) 148-வது அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
ஜன.14-ல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே அறிவுசார் சொத்துரிமையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
சீனாவை சேர்ந்த ஹுவாங் யான்லிங் என்ற உலகின் முதல் கரோனா நோயாளி மர்மான முறையில் மாயமாகியுள்ளார் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கரோனாவிற்கு எதிராக “சினோபார்ம்” (Synoform) என்ற கரோனா தடுப்பூசியை சீனா கண்டுபித்துள்ளது.
ஏப்.1-ல் 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்திற்கான இந்தியாவின் புதிய வர்த்தக கொள்கை தொடங்க உள்ளது.

 • சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலையாக அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள்
மத்திய நிதி அமைச்சகமானது வங்கி முதலீட்டு நிறுவனம் என்ற அமைப்பினை நிறுவுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்த வங்கி முதலீட்டு நிறுவனம் அமைப்பு பி.ஜே.நாயக் குழு (P.J. Jayak Commkitte) தனது இந்தியாவில் வங்கி வாரியங்களின் ஆளுகை (Governance of Boards of Banks in India) எனும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் முதன் முதலாக ரத்த குழாய்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட் (indigenous flow diverter stent) இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

 • இதனால் பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றுள்ளதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

 • நியூசிலாந்து – 2வது இடமும், ஆஸ்திரேலியா – 3வது இடமும், இங்கிலாந்து – 4வது இடமும், தென் ஆப்பிரிக்கா – 5வது இடமும் பிடித்துள்ளன.
மத்திய அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜன.23-ஐ வருடந்தோறும் “தேசிய வலிமை தினமாக / பராக்ககிரம தினமாக” கொண்டாட தீர்மானித்துள்ளதாக மத்திய கலாச்சராத்துறை அமைச்சர் பிரகாலத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.
முதலாவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

(2021 ஜன.18 முதல் பிப்.17 வரை)

கருப்பொருள் : சாலைபாதுகாப்பு உயிர் பாதுகாப்பு (Sadak Suraksha – Jeevan Raksha)

19th January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment