TNPSC Current Affairs 20th November 2023
Here are the one-liner current affairs for November 20th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7 அடி திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு மாநாடு
- 2024-ஆம் ஆண்டில் ஜனவரி 5-ல் தமிழகர்களின் வரலாறு, பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யவும், சங்க இலக்கியங்களில் கண்டறியப்படும் புதிய ஆய்வுகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் பன்னாட்டு மாநாடானது சென்னையில் நடைபெற உள்ளது.
- உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சார்பில் உலகக் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு என்னும் தலைப்பில் நடத்தப்பட உள்ளது.
கல்வெட்டுகள்
- 15 ஆம் நூற்றாண் கால பாண்டியர், சோழர் காலத்து கல்வெட்டானது அத்தாளநல்லூர் அருள்மிகு கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகிலுள்ள அமைந்துள்ள இக்கோயிலை பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கட்டினான்.
- கோயிலின் பிரகாரத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1122), சடையவர்மான் வீர பாண்டியன் (1253-83). முதலாம் மாறவர்மன் குலசேகரன் (1268-1312) ஆகியோரது கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலை திறப்பு விழா
- நவம்பர் 27-ல் சென்னையில் 1989-1990 வரை இந்திய பிரதமாக பதவி வகித்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறக்கப்பட உள்ளது.
- மண்டல் கமிஷன் பரிந்து செய்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டினை அமல்படுத்தியவர்.
- சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பானது அனுப்பப்பட்டள்ளது.
Tamilnadu Current Affairs
புதுடில்லி
- வம்பர் 14-27 வரை புதுடில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் 47வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது.
- இக்கண்காட்சியின் கருப்பொருள் – வசுவதைவ குடும்பம் வர்த்தகத்தால் ஒன்றுபட்டது.
எல்நினோ தாக்கம்
- எல்நினோ தாக்கம் காரணமாக பருவநிலை மாற்றத்தால் ஆசியாவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு சர்க்கரை விலையானது ஏற்றம் கண்டுள்ளது.
- எல் நீனோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வை குறிக்கிறது.
- குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையானது சராசரி வெப்பநிலையினை விட அதிகமானதாக இருக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்புக்கு இடையே பாரம்பரிய, துணை மருத்துவத் திட்டங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தானது.
Sports Current Affairs
ஆஸ்திரேலியா சாம்பியன்
- அகமதாபாத்தில் நடைபெற்ற 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆஸ்திரேலிய அணி இக்கோப்பையை 6வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015, 2023) வென்றுள்ளது.
- ஆட்டநாயகன் விருதானது ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்க்கும், தொடர் நாயகன் விருதானது இந்திய அணி வீரர் விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.
- இத்தொடரில் அதிக ரன் அடித்த வீராக விராட்கோலியும் (765), அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக முகமது சமியும் (24), அதிக சதம் அடித்த வீரராக குயின்டன் டி காக்கும் (4) தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Important Days and Dates –20th November 2023
உலகளாவிய குழந்தைகள் தினம் (Universal Children’s Day) – Nov 20
- கருப்பொருள்: For Every Childe. Every Right
ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் (Africa Industrialization Day) – Nov 20
–> More Days