TNPSC Current Affairs in Tamil: 20-10-2020
தேசிய நிகழ்வுகள்
- இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கத் தலைவராக சீமுா முஸ்தபா தேர்வு.
- கூட்டுறவு நிறுவனங்களால் சுகாதார கட்டமைப்பை உருவாக்க, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் ரூ,10,000 கோடி மதிப்பிலான ஆயுஷ்மான் சகாநர் நிதி திட்டம் தொடக்கம்.
- சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் 551-ம் ஆண்டு பிறந்த நாள் விழா வரும் நவம்பர் 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் கொண்டாட்டம்.
- சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகத்தின் உதவியுடன் இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஹெச்.பி.டி, இமாலயாவின் லாஹூல் சமவெளியில் பெருங்காய (ஹீங்) சாகுபடியை மேற்கொண்டுள்ளது.
- SANT ஏவுகணை சண்டிப்பூர் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை
- அசாமில் முதல் மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவிற்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அக்டோபர் 20 அன்று அடிக்கல் நாட்டுகிறார்
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) – சென்டரல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.இ.ஆர்.ஐ) திடக்கழிவு செயலாக்க வசதியை உருவாக்கியுள்ளது.
- தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ராணுவ வீரர்களுக்காக அமெரிக்காவிலிருந்து குளிர்கால உடைகளை வாங்கியது .
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு எதிராக செயல்படும் பசுமை குழுக்கள் அமைக்கும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு தொடங்கியது
- ஃபோ்கோஸ் நாடு முழுவதும் செயல்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
- டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஓற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சன், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நஜோமி ஒகுஹரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றர்.
- ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம். இந்தியாவிற்கு 4வது இடம்
- 2020 3எம் இளம் விஞ்ஞானி போட்டி அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது
முக்கிய தினங்கள்
- World Oseteoporosls Day (WOD)
- சர்வதேச புள்ளியல் தினம்
சமீபத்திய வேலைகள்
nice