Tamil Current Affairs – 21st December 2020
ஆங்கில எழுத்துக்களை தலை கீழாக 5.071 நொடிகளில் தட்டச்சு செய்து சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதி குமார் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். |
சாலை விதிகளை பின்பற்றாமலும் சரியான கட்டமைப்பு வசதி இல்லாமலும் சாலை விபத்தில் இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டில் 25,858 இறந்துள்ளனர்.
|
நேபாள அதிபரான வித்யா தேவி பண்டாரி அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையையின்படி நாடாளுமன்றத்தை (கீழவை) கலைத்துள்ளார். |
டிசம் 22 முதல் 26 வரை இந்தியா-வங்கதேச எல்லை பேச்சுவார்த்தை குவாஹாட்டியில் நடைபெற உள்ளது. |
டிசம்.20-ல் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள் கூடுதலாக ரூ.16,728 கோடி கடன் வாங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதில் அடங்கும் மாநிலங்கள்
|
டிசம்.20-ல் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப்பணியை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
|
இன்று (டிசம்.21) வியத்நாம் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். |
இன்று (டிசம்-21) 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன், சனி இரு கோள்களும் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு நடக்க இருக்கிறது.
|
உலகின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா குஜராத் மாநிலத்தில் 280 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. .
|
1971-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் வென்றதன் காரணமாக இந்திய கடற்படை வாரம் (டிசம் 4 தேதி முதல் ஒருவார காலம்) கொண்டாடப்பட்டு வருகிறது. |
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 9 பதங்களுடன் 2வது இடம் பிடித்ததுள்ளது. |
ஜெருசலேம் புனித யாத்திரை உதவித்தொகை ரூ.37 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. |
பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி கால்பந்து போட்டியில் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் (643 கோல்கள்) அடித்து கால்பந்து நட்சத்திர வீரர் பீலேவின் சாதனையை சமன் செய்யதார். |
தற்காப்பு கலைகளான “கட்கா, களரிப்பயட்டு, தங்டா, மல்லர்கம்பர்” ஆகிய விளையாட்டுகளை 2021 “கேலா இந்தியா விளையாட்டு” போட்டியில் சேர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. |