ஜன.20-ல் வெளியிடபட்ட நீதி ஆயோக்“புதிய கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டு பட்டியலில்தமிழகம்மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலுங்கான, கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார் முதலான மாநிலஙக்ள் பட்டியலின் கடைசி இடத்தை பெறுகின்றன.
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரிசத்யபிரதசாகு ஜன.20-ல் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை = 6,10,44,358
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை = 3,01,12,370
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை = 3,09,25,603
இதர பிரிவினைச் சார்ந்தவர்கள் = 6,385
அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட மாவட்டம் =சென்னை (40,57,360)
குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட மாவட்டம் =நீலகிரி (5,85,049)
அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதி =செங்கல்பட்டு மாவட்ட சோழிங்கநல்லூர் தொகுதி (6,94,84)
குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதி =சென்னை மாவட்ட துறைமுகம் தொகுதி (1,76,272)
புதிய வாக்காளர் எண்ணிக்கை = 8,97,694
இளம் வாக்காளர் எண்ணிக்கை = 13,09,311
ஐன.20-ல் ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கான புள்ளி விவரங்களை சேமிக்கும்நீதிபதி குலசேகரன் ஆணைய கூட்டம் நடந்தது.
தாய்-சேய் நலனில் உலகசாதனையாகபிரசவகாலத்தில் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ரூ25கோடி செலவில் 400 படுக்கை வசதியுடன் சென்னைக்கு இணையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஒப்புயர்வு மையம் திறக்கபட்டது.
5.08,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தமிழகத்திற்கு மத்தியஅரசு அனுப்பி வைத்துள்ளது
ஜன.21 முதல் 22 வரை பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சிதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
2021-22 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜன.30-ல் பிரதமர் தலைமையில்அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜன.29-ல் குடியரசுத்தலைவர் உரையுடன் 17வது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் தொடங்குகிறது.
பிப்.1-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்.15-ல் முதல் நிதிநிலைக் கூட்டம் நடைபெற உள்ளது
மார்.8 முதல் ஏப்.8 வரை இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
அக்கு பஞ்சர் சிகிட்சைக்குஉரிய அங்கீகாரம் மற்றும் அதை ஒரு மருத்துவ முறையாக கொண்டு வர நடுவன் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
ரூ.2,691 கோடி நிதியை பிரதமரின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுக்குஉத்திர பிரதேசத்தில் பிரதமர் வழங்கினார்.
மத்திய அரசு புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிவறை கட்ட தூய்மை இந்தியா திட்டதின் கீழ் ரூ12,000 வழங்கிறது.
கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துடன் சேர்த்து
எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம்
மின்சாரம் வழங்கும செளபாக்யா திட்டம்
குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும ஜல் ஜீவன் திட்டம்
ஆகியவையும் செயல்படுத்து வருகின்றன.
ஜன.20-ல் சீக்கிய மதத்தின் 10வது குருவானகுரு கோவிந் சிங்354 பிறந்த தினத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்
“டிராகன்” என்பது சீன நாட்டினை நினைவுபடுத்துவதால் குஜராத் மாநில முதல்வர் டிராகன் பழத்தின் பெயரை “கமலம்” என்று மாற்ற முடிவு செய்யதார்.
சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு ஜன.30ம் தேதி 2 நிமிட மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஜன.30-ல் கடைபிடிக்கப்படும் இந்த வழக்கம் அரசு அலுவலங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. இந்த வருடம் நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையில் போடும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இடையில் மூக்கின் வழியாக விடப்படும்“நாசி” தடுப்பூசிக்கு அனுமதி அரசு அளித்துள்ளது.
விமான நிலையங்களின் பராமரிப்பிற்குமத்திய அரசுடன் அதானி குழு ஒப்பந்தம் செய்துள்ளது.
திருவனந்தபுரம், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர் ஆகிய 6 விமான நிலையங்கள் 2019-ல் மத்திய அரசு தனியார் மயமாக்கியது.
அதானி குழுமத்துக்கு இந்த விமான நிலையங்களை 50 ஆண்டுகள் நிர்வகிக்கும் உரிமை கிடைத்ததால் லக்னோ, அகமதாபாத், மங்களூர் விமான நிலையங்கள் அதானி குழுத்திடம் ஒப்படைக்கப்பபட்டது.
ஜன.19 முதல் 20 வரை இன்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Internet & Mobile Association of India)-வின் மூலம் 15வது டிஜிட்டல் உச்சி மாநாடு 2021 (India Digital Summit 2021) நடத்தப்பட்டது.
தற்சார்பு இந்தியா – புதிய சகாப்தத்தின் ஆரம்பம் (Aatmanirbhar Bharat – Start pf New Decade) என்பது இம்மாநாட்டின் மையகருத்து
அமேசானுடன் இணைந்து குவாண்டம் கணினியியல் செயல்பாடுகள் ஆய்வகத்தைமின்னணு மற்றும் தகவல் அமைச்சகம் அமைக்க உள்ளது.
ஜன.20-ல் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபைடனும்துணை அதிபராக கமலா ஹாரிஸூம் கேபிடாலில் பதவியேற்றனர்.
இரண்டரை மாதத்திற்கு முன் மாயமான சீனாவின் புகழ் பெற்ற ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா நிறுவன தலைவர்ஜாக்மா 50 வினாடி ஆன்லைன் வீடியோ ஒன்றில் தோன்றியுள்ளார்.
ஷாங்காயில் நடந்த நிகழ்ச்சியில் சீன அரசு வங்கிகளின் அணுகு முறையை கடுமையாக விமர்சித்ததல் இவர் தொடங்க இருந்து பல கோடி மதிப்பிலான பங்கு சந்தை நிறுவனத்திற்கு தடை வித்தது. அலிபாபா நிறுவனத்தின் மீது ஏகாதிபத்திய விசாரணைக்கு உத்தரவு விட்டது. மேலும் அவரை நாட்டு விட்டு வெளியேறக்கூடாது என்றதால் வெளியில் தோன்றவில்லை.
விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன்கள் வரிசை பட்டியலில் 691 புள்ளிகளுடன் ரிஷப்பந்த்முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வீரர்குவிண்டன் டிகாக்677 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ரிஷப்பந்த்13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
குவிண்டன் டிகாக்15வது இடத்தில் உள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் தாத்தாவும், மலையாள நடிகருமானஉன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஜன.20-ல் காலமானார்.