Tamil Current Affairs – 21st November 2020
இணையவழி சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்ய தமிழக அரசு பிறபித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். |
பி.கே. மொஹந்தி தலையிலான ரிசர்வ் வங்கி குழு பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. |
பிரதமரின் “கிருஷி சிஞ்சய் யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.1,358 கோடி கடன் தமிழக நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு வழங்க உள்ளது. |
மத்திய சுகாதாரத்துறை அமைசர் ஹர்ஷ்வர்தரன் 2022-ம் ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார குடும்ப நலமையங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டதாக அறிவித்தார். |
பூடான் மக்களின் இணைவழி பணப்பரிவர்தனையை எளிமைபடுத்த பிரதமர் மோடியும், பூடான் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாக இரண்டாம் கட்ட ரூபே அட்டைத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். |
உலக சுகாதார அமைப்பு கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து “ரெம்டெசிவர்” மருந்தை நீக்கியுள்ளது. |
இத்தாலியை சார்ந்த தொல்லியல் நிபுணர் குழு பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 வருடம் பழையான ஹிந்து கோவிலை கண்டுபிடித்துள்ளது. |
“ஷகி பெய்ன்” நாவலை எழுதிய ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தளார் டக்ளஸ் ஸ்டூவர்ட்(44) புக்கர் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். |
இந்தியன் ஆயில் நிறுவனம் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வாயுக்கள் உமிழ்வு முற்றிலும் இல்லாமல் மின் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் நவீன தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. |
அசாம் முதல்வரின் ட்விட்டர் கணக்கு உலக குழந்தைகள் தினத்தில் அந்த மாநிலத்தின் வந்தனா ஊரங் என்ற மாணவி 2 மணி நேரம் நிர்வகித்துள்ளார். |
கரோனா நோயை தடுக்க 2021 பிப்ரவரியில் வெளிவருகின்ற ஆகஸ்போர்டு மருந்து தடுப்பூசியின் 2 டோஸின் விலை ரூ.1000 என சீரம் நிறுவன (சிஇஓ) தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூணாவாலா தகவல் |
சேலம் மாவடத்தில் வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதீப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். |
இந்திய யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் (62) காலமானர் |
சர்வதேச குழந்தைகள் தினம் (நவம்.20) |