TNPSC Current Affairs in Tamil – 22nd December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 22nd December 2020

 

தமிழக முதல்வரால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்த 35 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
2020 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரிக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.

  • 2018 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பிரபாகருக்கு
  • 2019 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருது அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தனுக்கும்

வழங்கப்பட்டது.

திருந்திய நெல்சாகுபடியின் மூலம் அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருதினை “நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது” என்ற பெயரில் வழங்கபடும் என முதல்வர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பூசி அடுத்த மாதம் (2021-ஜனவரி) இந்தியாவின் வழங்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – வியட்நாம்  இடையே பாதுகாப்பு, அணுசக்தி, பெட்ரோ கெமிக்கல், புதுப்பிக்கதக்க எரிசக்தி, புற்றுநோய் உள்ளிட்டவை தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சீனா – பாகிஸ்தான் இணைந்து சிந்து மாகாணத்தில் “வாஹீன்” என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
“இந்தியாவில் 2018-ம் ஆண்டு சிறுத்தை புலிகளின் நிலை என்ற அறிக்கையை சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்

சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது என இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது

2014-ல் 8000-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 12,852 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதில்

  • முதல் இடம் – மத்திய பிரதேசம் (3,421)
  • இரண்டாம் இடம் – கர்நாடகம் (1,783)
  • மூன்றாம் இடம்  – மகாராஷ்டிரம் (1,690)
முல்லாக் மெடல் என்ற சிறப்பு பதக்கம் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படும் வீரருக்கு வழங்கப்பட உள்ளது.
2021 தொடக்கத்தில் நடைபெற உள்ள பாட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா நெவால் இடம் பிடித்துள்ளனர்
நாசா 2024-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ள திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Links

Leave a Comment