TNPSC Current Affairs in Tamil – 22nd January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 22nd January 2021

இந்தியாவின் மிகப் பழமையான ரயிலான ஹவுரா-கல்கா மெயிலினை (Howrah-Kalka Mail)  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு அஞ்சலி செலுத்தும்படி நேதாஜி எக்ஸ்பிரஸ் (Netaji Express) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 • நேதாஜியின் 125 பிறந்த தின விழாவினையொட்டி (ஜன.23) இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது
மகாராஷ்டிரா நாக்பூரில் உள்ள 2,000 ஹெக்டேர் வன நிலங்களை கொண்ட கோரவாடா சர்வதேச மிருகக்காட்சிசாலையை (Gorewada International Zoo) மகாராஷ்டிரா அரசு பாலாசாகேப் தாக்கரே கோரேவாடா சர்வதேச விலங்கியில் பூங்கா (Thackeray Gorewada International Zoological ParK) என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
இந்தியாவில் மத்திய பிரதேசம் மின்சார மானியத்தை நேரடி பணப்பரிமாற்றத்தின் (Direct Benifit Tranfer) மூலம் வழங்கிய முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது.
ஆந்திராவில் ஐன.21-ல் மக்களுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தினை அம்மாநில ஜெகன் மேகன் ரெட்டி துவங்கி வைத்தார்.
திரிபுரா மாநில அரசு இலவச நாப்கினிகளை அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
கர்நாடகாவில் 7,86,000 மருத்துவப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் கரோனோ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை செயல்படுத்தும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது.
அரசு நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கான மின்னாளுமை கருவியான அவோலோகனா மென்பொருளை கர்நாடகா அரசு அறிமுகம் செய்துள்ளது.

 • 39 துறைகளால் செயல்படுத்தப்பட்ட 1800 திட்டங்களில் செய்த பொருளாதாரத்தடைகள் & செலவுகள் குறித்த தரவை கண்காணிக்கவும் அணுகவும் அரசாங்கம் இந்த மென்பொருளை பயன்படுத்தும்.
குளேபல் ஃபையர் பவர்  என்ற நிறுவனம் வெளியிட்ட ராணுவ வலிமை தரவரிசை பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

 • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன
 • இந்தியாவில் 542 போர் விமானங்கள், 37 தாக்குதல் ஹெலிக்காப்டர்கள், 17 நீர்மூழ்கி கப்பல்கள், 4,730 டாங்கிகள் உள்ளதென இந்த அறிக்கை தெரிவிக்கிறது
அஸ்ஸாம் மாநிலத்தின் நம்ரூப்பில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனோடு யூரியா தொழிற்சாலை (Urea Plant) அமைக்கப்பட உள்ளது.
2021 ஜனவரி கடைசி வாரத்தில் அந்தமானில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை & கடலோர காவல் படை ஆகியவை இணைந்து கவாச் ஒத்திகை (Exercise Kavach) என்ற பெயரில் கூட்டு பயிற்சியை நடந்திகின்றன.
மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சர Dr. ஹர்ஷ்வர்தன் கடத்தல் & போலியான வர்த்தகங்களுக்கு எதிரான இயக்கத்தினை7வது மாஸ்கிரேட் 2021″ (Mascrade 2021) என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.

இந்த கூடுகையை இந்திய தொழில், வர்த்தக சங்க கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) ஏற்பாடு செய்தது.

2021 ஜன 15-யுடன் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் ஓடிடி சேனல் (India Science, Nation’s Science & Technology OTT (Over the top) Channel) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த சேனலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிகக்கிறது.

ஜன.22-ல் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், கோவா அரசு இணைந்து கோவா மாநிலத்தில் உள்ள 4 இலட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய மையத்தை ஷரம் சக்தி டிஜிட்டல் தரவு தீர்வகம் (Shramshakti Digital Data Solution) என்ற பெயரில் தொடங்க இருக்கிறது.
ரூ.5281.94 கோடியை ஜம்மு-காஷ்மீரின் கிஷட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது 850 மெகாவாட் ரேட்டல் நீர் மின்சக்தி திட்டத்தில் (Ratle Hydro Power project) முதலீடு செய்வதற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இத்திட்டமானது தேசிய நீர் மின்கழகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக முறையே 51% & 49% பங்களிப்புடன் நிறுவப்பட்டிருக்கும் புதிய கூட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

ஜன.20-ல் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சூரிய மின்சக்தி துறையில் இந்தியா உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிஜி நாட்டின் நஜாம் ஷமீம் கான் (Nazhat Shameem Khan) என்ற பெண்மணி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (United Nations Human Rights Council (UNHRC)) தலைமை பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

 • எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கே (Elisabeth Tichhy-Fisslberge) என்ற ஆஸ்திரியர் இப்பதவியை வகித்தார்
 • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் 15.03.2006 அன்று தொடங்கப்பட்டது.
 • இதன் தலைமையிடம் ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
மீண்டும் அமெரிக்கா பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்ததில் இணைந்துள்ளது.

 • ஜோபைடன் பதவியேற்ற முதல் நாளிலே இந்த ஒப்பந்ததில் இணைந்துள்ளது.
 • மேலும் குறிப்பிட்ட முஸ்லீம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடை, பருவ நிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டு இணைதல், கரோனாவை கட்டுப்படுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முககவசம் அணிதல், மக்களுக்கு பொருளாதார உதவி, முந்தை டிரம்ப் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் ஆகிய உத்தரவுகளுக்கு கையெழுத்திட்டார்.
ஜன.20-ல் பாகிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட மேற்பரப்பு – மேற்பரப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை “ஷாஹீன்” என்ற பெயரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

 • பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மிக நீண்ட தூர ஏவுகணை இதுவே
 • 750 கிமீ தூரத்திலூள்ள இலக்கை தாக்க வல்லது
மத்திய நேரடி வரிகள் வாரியம் (Cental Borad of Direct Taxes (CBDT)) “முகமறியாத அபராதத்திட்டம் 2021” என்ற புதுமையான திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

அபராத தொகையினை டிஜிட்டல் முறையில் வசூல் செய்ய நாடெங்கும் இத்திட்டத்தின் வாயிலாக தேசிய முகமறியா அபதார மையங்கள் (National Faceless Penalty Centres (NFPC)) அமைக்கப்பட உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் முறையான “முக்கிய உள்நாட்டு வங்கி பட்டியல் 2020”-ஐ வெளியிட்டுள்ளது.

2020 மார்ச் 31-ன் நிலவரப்படி சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான இந்த பட்டியலில் கீழ்காணும் வங்கிள் அறிவிக்கப்பட்டுள்ளன

 • ஸ்டேடட் பாங்க் ஆப் இந்தியா
 • ஐசிஐசிஐ (Industrial Credit and Investment Corporation of India)
 • எச்டிஎப்சி (Housing Developent finance corporation of India)
ரவி கெய்க்வாட் என்பவருக்கு நெல்சன் மண்டேலா உலக மனிதாபினமான விருது (“Nelson mandela:”World Humantarian Award) வழங்கப்பட்டது.
அமைச்சவரவையின் நியமனக்குழு சித்தார்த்த மொஹந்தியை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக (Life Insurance Corportaion (LIC) நியமிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.
சஞ்சீவ் குமார் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (Telecommunicatons Consultants India Ltd (TCIL)) அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற ஊதா நட்சத்திரங்களை (ultraviolet-bright stars) நமது பால்வெளியில் உள்ள என்ஜிசி 2808 (NGC 20808) எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் நட்சத்திரங்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை இந்தியாவின் அஸ்ட்ரோசாட் புற ஊதா பட தொலைநோக்கியின் (Astorsat’s Ultraviolet imagingg Telescope) மூலம் ஆராய்ந்து வரும் வானியலாளர்கள்  கண்டறிந்துள்ளன.
கிறிஸ்டியோனோ ரொனால்டோ (போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர்) கால்பந்து வரலாற்றில் அதிககோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜன.18 முதல் 30வரை கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் லடாக்கின் சன்ஸ்கார் சமவெளி என்ற இடத்தில் நடைபெறுகிறது
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சுசாம்சன் நியமிக்கப்ட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் 2021 ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.


21st January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment