Tamil Current Affairs – 23rd & 24th November 2020
தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நவம்.25 “காரைக்கால் – மாமல்லபுரம்” இடைய கரையை கடக்க உள்ளது. இதற்கு ஈரான் “நிவர்” புயல் என பெயரிட்டுள்ளது |
தில்லியில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ஜெயபிரகாஷ் முகக்கவச வங்கியொன்றை தன் வீட்டில் நவம்.22 தொடங்கி வைத்தார். |
“ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டம்” மூலமாக கடலில் இருந்து இயற்கை வளங்கள், தாதுக்களை தோண்டி எடுப்பது தொடர்பான திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது |
சாய்ராம் கல்லூரி முதல்வர் க.பழனிக்குமார் மெட்டீரில் துறையில் சிறந்த விஞ்ஞானியாக அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர் ஜான்லோனிடிஸ் தலைமையிலான குழு அறிவித்துள்ளது. |
ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலயர்களுக்காக “புதிய தொழில் நுட்பத்துடன் கவச உடையை” வடிவமைத்துள்ளார். |
“ராஷ்டிரபதி விருது” பெற்ற கேரள இளைஞர் ரிஷிகேஷ் செல்போனில் வாக்களிக்கும் நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளார். |
ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஆற்றில் இயங்குகின்ற தானியங்கி கண்காணிப்பு படகை உருவாக்கியுள்ளனர். |
ரஷ்யாவின் “டேனில் மெத்வதேவ்” இங்கிலாந்தில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்சாம்பியன் பட்டம் வென்றார். |
இங்கிலாந்தில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் குரேர்ஷியாவின் நிகோலா மெக்டிக்/நெதர்லாந்தின் வெஸ்லே இணை சாம்பியன் பட்டம் வென்றனர். |
2011-ல் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலத்தில் ரோவர் சேகர்த்த தரவுகளின் மூலம் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளதாக்கு வழியாக வெள்ளம் வழிந்தோடியதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. |
“சைட்மெக்ஸ்- 20” என்று அழைக்கப்படும் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நவம் 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்றது. |
2021-ம் ஆண்டிற்காக “உலகின் சிறந்த நகரங்கள்” பட்டியலில் டெல்லி 62வது இடத்தை பெற்றுள்ளது) |
இந்திய வம்சாவளியை மாணவரும், இந்திய மாணவரும் ஆதித்யா சவுத்ரி, குயின் ஆகியோர் சர்வதேச காமலன்வெல்த் கட்டுரைப் போட்டியில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். |
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய்(84) காலமானார் |
பொள்ளாச்சியை பாடலாசிரியர் குமாரதேவன்(88) காலமானர் |