TNPSC Current Affairs in Tamil – 23rd December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 23rd December 2020

திருப்பத்தூர் மாவட்டம்  தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவினை டிசம்.23 முதல் 29 வரை அனுசரிக்கிறது.
நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” (The Gray Man) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க உயரிய விருதான “லெஜியன் ஆப் மெரிட்” மோடிக்கு வழங்கினார்.
மத்திய எரிசக்தி அமைச்சகம் முதன் முறையாக மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதி முறைகளான மின்சார விதிகள் 2020 (Electricity Rights of Consumers) Rules, 2020) -ஐ  வெளியிட்டது.
மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகமானது ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைகளுக்கான புதிய வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது.
2020 செப்.21 முதல் சுங்க விதிகள் 2020 (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழான நிர்வாக விதிகள்) (Customs (Administraion of Rules of Origin Under Trade Agreements) Rules, 2020) அமலுக்கு வந்தன.
கேட்டா நிறுவனம் மற்றும் ஃப்ரேசர் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள 2020 மனித சுதந்திர குறியீட்டில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது.

 • முதலிடம் – நியூசிலாந்து
 • இரண்டாமிடம் – சுவிட்சர்லாந்து
 • மூன்றாமிடம் –  ஹாங்காங் பெற்றுள்ளது.
2020 யுனெஸ்கோ (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization) கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பபிற்கான ஆசிய-பசுபிக் விருதுகளில் (Unesco Asia-Pacific Awards for Cultural Heritage Conservation) ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநர் அமர் சிங் கல்லூரி சிறப்புத் தகுதி விருது (Award of Merit) பெற்றுள்ளது.
ஹரியானாவின் குவர் பஹாரி, குருகிராம் என்னுமிடத்திலுள்ள தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம் (National Institute of Solar Energy (NISE)) வளாகத்தில் இந்தியாவின் முதலாவது, மின்துறையில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20வது இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் அமைச்சர்கள் குழு கூட்டம் 2020-ஐ நடத்தியது.
இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு மிசோரம் ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை எழுதிய “ஓ, மிசோரம்” என்ற கவிதைகளின் தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டார்.
ஆசியா நியூஸ் இன்டர்நேஷனல் (Asia News International (ANI)) தலைவர் பிரேம் பிரகாஷ் Reporting India : My Seventy – Year Joureny as a Journalist” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
திருவள்ளுவர் மாவட்டத்தை சார்ந்த எல்.அபினேஷ் உலக வலு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
ஏடிபி விருதுகளுக்கு ஜோகோவிச், ஃபெடரர், நடால் தேர்வாகியுள்ளனர்

 • ஜோகோவிச் – ஆண்டு இறுதியில் முதல்நிலை வீரர் விருது (தொடர்ந்து 6வது முறையாக)
 • நடால் – ஸ்டெஃபான் எட்பர்க் சிறந்த விளையாட்டு வீரர் விருது (4வது முறையாக)
 • ஃபெடரர் – ரசிகர்களின் விருப்த்துக்குறிய ஒற்றையர் பிரிவு வீரர் விருது (தொடர்ந்து 18வது முறையாக)
 • பிரிட்டனின் ஜேமி முர்ரே/நீல் ஸ்குப்ஸ்கி இணை – இரட்டையர் பிரிவில் “ரசிகர்களின் விருப்பமான வீரர்கள் விருது
 • இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடி – இரட்டையர் பிரிவில்  முதல்நிலை வீரர்கள் விருது
 • கனடாவின்  வாசெக் போஸ்பிஸி – சிறந்த மீண்டு வந்த வீரர் விருது
 • ரஷ்யாவின் ஆன்ட்ரே ரூபேல – ஆண்டின் மிகவும் மேம்பட்ட வீரர் விருது
 • அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆர்தர் ஆஷே மனித நேயத்திற்கான விருது
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் பிராட்மேன் தொப்பி ரூ.2.50கோடிக்கு ஏலம் போனது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் – 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது…

Related Links

Leave a Comment