Tamil Current Affairs – 23rd January 2021

+2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் இதுவரை எந்த அளவிற்கு அறிவுத்திறன் அடைந்துள்ளன என்பதை அறியும் வகையில் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு “எமிஸ்” தளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. |
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ரூ. 19.26 கோடியில் படப்பை பகுதியில் அமைக்கப்பட உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார். |
கரோனோ காலத்தில் அத்தியாவசிய பொருள்களை அதிகளவு அனுப்பி சிறந்த சேவையாற்றியதற்காக “ஸ்கோச்” விருதில் (SKOCH) தெற்கு இரயில்வேக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
- தெற்கு இரயில்வே தலையிடம் சென்னை
- ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்களை அதிகளவு அனுப்பியது.
- சானிடைசர், மாஸ்க் தயாரித்து வழங்கியது.
- 507 ஷராமிக் இரயில்களை புலம் பெயர்ந்து வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்க செல்ல இயக்கியது.
- அதிகமான ஐசோலேசன் பெட்டிகளை வழங்கியுள்ளது.
|
இன்று (ஐன.23) ஜீரண மண்டல நலன் குறித்த சர்வேதச இணைய வழி மாநாடு நடைபெறுகிறது
- அமெரிக்க ஜீரண மண்டல அமைப்புடன் சென்னை மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளன.
- இம்மாநாட்டில் ஜப்பான், பிரேசில், இலங்கை, வளைகுடா நாடுகள், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மருத்துவர் கலந்துகொள்ள உள்ளனர்.
- குடல்-இரப்பை சிகிச்சை முறைகளில் தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்வற்றை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளன.
|
வட கர்நாடகம் குடமட்டா தாலுகாவில் ஹொலவள்ளி கிராமத்தில் அரியவகை பறக்கும் ஓணான் லோகேஷ் என்பவரின் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரியவகை ஓணான் மேற்கு தொடரச்சி மலை, தெற்கு ஆசியாவில் மட்டுமே உள்ளது.
- இதற்கு முன்னங்காலில் இருந்து பின்னங்கால் வலரை முறம் போல் இறக்கை உள்ளது.
- நீண்ட வால், சிறிய கால்கள் உள்ளன.
- பறவைகள் போல இறக்கையை அடிக்காமல் பறக்கிறது.
- இடத்திற்கு ஏற்றாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
|
ஆண்டுதோறும் பிப்.21-ல் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் மாநிலங்கள் உதயமான தினம் கொண்டாடப்பட்டப்படுகிறது.
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் 1971-ல் ஜனவரி 21-ல் தனித்தனி மாநிலங்களாக உதயமாகின. |
ஜன.22-ல் மேகலயா முதல்வர் கோன்ராட் சங்மா (Conrad Sangama) அம்மாநிலத்தின் தரியா கிராமத்தில் இந்தியாவின் மிக நீளமான எஃகு வளைவு பாலத்தினை (India’s Longest Steel Arch Bridge) திறந்து வைத்தார். |
அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படைத்தளம் நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து வரும் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவும், முழு பலத்துடன் உள்ளது என அந்த விமானப்படை தளத்தின் புதிய அதிகாரி தர்மேந்திர சிங் கூறியுள்ளார்.
- தர்மேந்திர சிங் ஜன.21-ல் தேஜ்பூர் விமானதளத்தின் புதிய அதிகாரியாக (AOC) பொறுப்பேற்றார்.
|
1,68,606 வீடுகள் பிரதமரின் நகர்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. |
இன்று (ஜன.23) அஸ்ஸாமில் பிரதமர் மோடி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கும் சிறப்பு திட்ட தொடக்க விழாவினை தொடங்கி வைக்கிறார். |
ஜன.22 முதல் ஐக்கிய நாடு சபையின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ப்பட்ட அணு ஆயதத் தடை தொடர்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
- அணு ஆயுதங்களை தடை செய்யும் முதல் சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.
- 2017-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 86 நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- 52 நாடுகள் இவ்வொப்பந்தத்தை அங்கீகர்த்துள்ளன.
- அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் இவ்வொப்பந்தத்தை ஆதரிக்கவில்லை.
|
தெலுங்கானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியரான வினய் ரெட்டி அமெரிக்க அதிபரான ஜோபைடனின் பதவியேற்பு உரையை தயாரித்து அளித்துள்ளார். |
அன்டோனியா குட்டெரெஸ் ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலாரக இரண்டாவது முறை வகிக்க சீனா ஆதரவு அளித்துள்ளது. |
ஜன.23 – முதல் தேசிய வலிமை தினம் (பராக்கிர திவாஸ் தினம்) |
22nd January Current Affairs – Read Here
Related Links
Related