தமிழக தேர்தல் ஆணையராக வி.பழனிக்குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக்காலம் – 2021 முதல் 2024 மார்ச் வரை
தொடர்புடைய செய்திகள்
அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் படி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில தலைமை தேர்தல் ஆணையரை மாநிலஆளுநர் நியமனம் செய்கிறார்
கிராண்ட் கம்பானியம் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது
பப்புவா நியூ கினியாவின் உயரிய விருதான கிராண்ட் கம்பானியம் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது
இவ்விருது பசுபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் டாப் டாடே வழங்கினார்.
விருதினை பெறுபவர்கள் சீஃப் என அழைக்கப்படுவர்
கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி விருது
ஃபிஜி நாட்டின் முக்கிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
டோக் பிசின் – திருக்குறள் வெளியீடு
திருக்குறள் பப்புவா நியூ கினியா அதிகார பூர்வ மொழியான டோக் பிசினில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது
மேற்கு நியூ பிரிட்டன் மகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் அவர் மனைவி சுபா சசீந்திரன் ஆகியோரால் மொழி பெயர்க்கப்பட்டது
இந்திய பிரதமர் மோடி மற்றும் பப்புவா நியூகனியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே ஆகியோர் நூலினை வெளியிட்டனர்
ஊராட்சிகளில் சொத்துவரி – இணையதளம்
ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மே 22 முதல் நடைமுறை இந்த இணையதளம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியல்
உலக தடகள அமைப்பு வெளியீட்டுள்ள தரவரிசை பட்டியிலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்
உலகதர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த முதல் இந்தியர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2வது, இடத்தை ஆண்டர்சன் பீட்டரும் 3வது இடத்தை ஜேக்கப் வட்லெஜரும் பிடித்துள்ளனர்.
சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டி
சுலோவேனியாவில் நடைபெற்ற சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இந்தியாவின் சமீர் வர்மா – தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில்ரோகன் கபூர் மற்றும் சிக்கி ரெட்டி – வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி
2023ம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது
இப்போட்டியில் மான் செஸ்டர் சிட்டி5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி
சென்னையில் ஜுன் 13 முதல் 17 வரை சர்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியைநடத்த உள்ளது
11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் உலகப்கோப்பை போட்டி இதுவாகும்