தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறைடைட்டன் நிறுவனத்துடன்5 மாவட்ட அரசு ஐடிஐக்களை மேமப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளது.
கோவை – ஆனைக்கட்டி
திருவண்ணாமலை – ஜமுனாமரத்தூர்
சேலம் – கருமந்துறை
நாமக்கல் – கொல்லி மலை
நீலகிரி – கடலூர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாமத்திய காவல்படை வீரர்களுக்கான (சிஏபிஎஃப்) ஆயுஷ்மான் CAPF (Ayushman CAPF (Central Armed Police Foreces)) என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சிஏபிஎஃப், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், தேசி பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) படைகளை சார்ந்த 28 லட்சம் வீரர்கள் & அவர்களின் குடும்பத்தினர்கள் பயன் அடைவார்கள்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் கரோனா தடுப்பூசியை உலகநாடுகளுக்கு வழங்கும் “உண்மையான நண்பன்” இந்தியா என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.
“உலகின் மருந்தகம்” என்று அறியப்படும் இந்தியா கரோனாவை எதிர்த்து போரிட அனைத்து நாடுகளுக்கும் உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள காற்று மாசு நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடப்பெற்றுள்ளன.
கான்பூர் நகரம் தான் முதலிடம் வகிக்கிறது.
காசி, கயா, டெல்லி, பாட்னா, ஆக்ரா, முஜார்பர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச காற்று மாசு தர நிர்ணயத்தின் படி துகள்கள் ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்து காற்று மாசு தீர்மானிக்கப்படுகிறது
50 மைக்ரோ கிராம் துகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விகிதம்
50-100 மைக்ரோ கிராம் வரை இருந்தால் திருப்தியான விகிதம்
100-200 மைக்ரோ கிராம் வரை இருந்தால் கொஞ்சம் அதிகமான விகிதம்
200-300 மைக்ரோ கிராம் வரை இருந்தால் மோசமான நிலை
300-400 மைக்ரோ கிராம் வரை இருந்தால் மிகவும் மோசமான நிலை
400 மைக்ரோ கிராம் வரை இருந்தால் ஆபத்தான நிலை, மனிதர் வாழ தகுதியற்ற காற்று
கரோனோ அச்சம் காரணமாகபிப்.1-ல் 2021-2022 பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக டிஜிட்டல் முறையில் இடம் பெற உள்ளதால் இதற்காக யூனியன் பட்ஜெட் (bnion budget) என்ற மொபைல் செயலியை ஜன.23-ல் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்
ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இச்செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இச்செயலி செயல்படுகிறது
தென்கிழக்கு மத்திய மண்டலம் ரயில்வே இந்திய ரயில்வேயில் முதன் முதலாக 3.5 கி.மீ நீளமுள்ள “வாசுகி” என்ற சரக்கு இரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.
ஐந்து சரக்கு இரயில்களை இணைத்து 3.5 கி.மீ நீளமுள்ள இரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
224 கி.மீ தொலைவை 7 மணிநேரத்தில் கடந்தது
முதன்முறையாக பிலாஸ்பூர் ரயில் கோட்டத்தில் உள்ள பிலாய்-யில் இருந்து கோர்பாகவுக்கு ஜன.22-ல் நிலக்கரி கொண்டு சென்றுள்ளது.
லாய்ட் ஆஸ்டின்அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் முதன் முறையாக இந்த பதவியை அலங்கரிக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற பெருமை ஆஸ்டினை சாரும்
ஜன.27 முதல் இலவச கரோனோ தடுப்பூசி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கபெறும் என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் பிப்.8-ல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான பதவி நீக்க விசாரனை மேற்கொள்ப்படும் என அச்சபையின் பெரும்பான்மை தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.
“லைர்” என்ற மிமிக்ரி செய்யும் வித்தியாசமான பறவை ஆஸ்திரேலியா காடுகளில் உள்ளது.
இது மற்ற பறவைகளைப்போல் இல்லாமல் வித்தியாசமான வகைகளில் குரல் எழுப்புகிறது.
தான் கேட்ட சப்தத்தை அப்படியே திருப்பி எழுப்பக் கூடிய திறன் கொண்டவை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய 6 வீரர்களுக்கு மஹிந்திரா ஆல் நியூ தார் எஸ்யூவி கார் (Mahindra All New Thar SUV) பரிசு அளிக்கப்படும் என மஹிந்திரா குழுமங்கள் தலைவர் ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
அந்த வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு
டி. நடராஜன்
வாஷிங்டன் சுந்தர்
ஷர்குல் தாக்குர்
முகமது சிராஜ்
நவ்தீப் சைனி
ஷுப்மன் கில்
நொய்டாவில் நடைபெற்று வரும் 65வது ஃப்ரீஸ்டைல் தேசிய மல்யுத்தப் போட்டியில் (75 கிலோ எடை பிரிவில்) ஹரியானா அமித்குமார்வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
சர்வீசஸ் விளையாட்டு கட்டுபாட்டு வாரிய வீரர் பங்கஜ் 57 கிலோ எடை பிரிவில் தங்கமும், ஹரியானவின் அமோன் வெள்ளியும், தில்லியின் ராகுல், ஹரியானவின் ஷுபம் ஆகியோரும் வெண்கலமும் வென்றனர்
சர்வீசஸ் விளையாட்டு கட்டுபாட்டு வாரிய வீரர் ரவீந்தர் 61 கிலோ எடை பிரிவில் தங்கமும், மகாராஷடித்தின் சூரஜ் வெள்ளியும், சர்வீசஸ் விளையாட்டு கட்டுபாட்டு வாரிய வீரர்களான நவீன், சோன்பாதானாஜி ஆகியோரும் வெண்கலமும் வென்றனர்.
அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் (CNN) லாரி கிங் (87) காலமானார்.
ஜன.24 – தேசிய பெண் குழந்தைகள் தினம்
2008-ம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்ப்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது
ஜன.24 – சர்வதேச கல்வி தினம்
கருப்பொருள் : Recover and Revitalize Education for COVID-19 Generation