கிராமங்களில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள் போல நகர்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடத்த உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் நாட்கள்
ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம்
ஏப்ரல் 14 – அம்பேத்கர் பிறந்த தினம்
செப்டம்பர் 15 – அண்ணா பிறந்த தினம்
டிசம்பர் 10 – சர்வதேச மனித உரிமைகள் தினம்
கண்ணாடிக் கூண்டுப்பாலம்
97மீ நீளமும், 4மீ அகலும் அளவிற்கு ரூ.37கோடி செலவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் விதமாக கண்ணாடிக் கூண்டுப்பாலம் அமைக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் – 3ம் கட்ட அகழாய்வு
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தின் மாளிகைபுரம் கிராமத்தில் நடைபெற்ற 3ம் கட்ட அகழாய்வில் செங்கற்களால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இவ்வாய்க்கால் 315 செ.மீ. நீளமும், 45 செ.மீ. அகலமும் உடையதாக அமைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் – புதிய நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர்.
இதன் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது
பதவியேற்றுள்ள நீதிபதிகள்
பி.தனபால் – சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்
ஆர்.சக்திவேல் – கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி
சி.குமரப்பன் – சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி
கே.ராஜசேகர் – கோவை மாவட்ட முதன்மை நீதிபதி
பிரதமர் ஆஸ்திரேலியா பயணம்
பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகம் அமைக்கப்பட உள்ளது
சிட்னியின், ஹாரிஸ் பூங்காவில் குட்டி இந்தியா நட்புறவு நினைவுச் சின்னம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
செளரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலிதிரிபுரா மாநில சுற்றுலா துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
சகோதரி நிவேதிகா முழு உருவச்சிலை
இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட சகோதரி நிவேதிகாவுக்கு இங்கிலாந்து, விம்பிள்டனிலுள்ள ரிசர்ட் லாட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் 6.2 உயர முழு உருவச்சிலை நிறுவப்பட உள்ளது.