Tamil Current Affairs – 25th December 2020
அனைத்து துப்புரவுப் பணியாளர்களையும் தூய்மை பணியாளர்கள் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது |
இந்தியா மட்டும் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோளை நோக்கி முன்னேறும் ஒரே நாடாக இருக்கிறது என பிரதர் தெரிவித்துள்ளார். |
2019-ம் ஆண்டிற்கான விருது, தங்கப்பதக்கத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுனவத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. |
விஸ்வபாரதி பல்கலைகழக விழாவில் சுற்றுசூழல் பாதுகாப்பில் இந்தியா உலகினை வழி நடத்துகிறது என மோடி கூறியுள்ளார். |
டிசம்24-ல் குஜராத்தின் ஆமாதாபாத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022 நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டியில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. |
டிசம்.24-ல் சீனியர் தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா தேர்வனார். |
100% குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்படுத்த தில்லியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு காற்று தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
|
உத்திர பிரதேச பல்லியா மாவட்டத்தின் தெஹ்ரி கிராமத்தின் நேஹா சிங் “மோட்சத்துக்கான மரம் (Tree of Salvation)” என்ற ஓவியத்தை 675.12 சதுர அடி நீளத்தில் வரைந்து நவம்.18-ம் தேதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் |
2021 ஜனவரி 1 முதல் ரூ.50,000-க்கு மேல் காசோலை பரிவர்த்தனைகளுக்கு “நேர்மறை செலுத்தும் முறை” (Positive Pay System) ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது . |
R-கிளஸ்டரிலிருந்து எரிவாயு உற்பத்தியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிெடட் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
|
கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய சச்சரவுகளை முடிவுக்கு கொண்டுவர 2020 டிசம்.15 முதல் 2021 பிப்ரவரி 15 வரை நடைபெறும் “வரசத் (இயற்கை வாரிசு)” என்ற பிரச்சாரத்தை டிசம்.15-ல் உத்திர மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்ககி வைத்தார். |
தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
அனில் பிரோஜியா கரோனா வைரஸ் பொது முடக்கத்தின் போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களில் முதல் 10 இடங்களில் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார். |
வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் வாகன எரிபொருளாக 20% எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவையான இ20-யை ஏற்றுக்கொள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. |
பாங்காக்கில் “இந்தியாவின் சுவை” என்னும் பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக செய்யப்பட்டது. |
உலக வங்கி வெளியிட்டுள்ள எளிதாக தொழில் தொடங்க வல்ல நாடுகளின் பட்டியலின் 17வது பதிப்பில் இந்தியா 63வது இடம் பிடித்துள்ளது
|
Related Links