TNPSC Current Affairs in Tamil – 25th February 2023

Current Affairs One Liner 25th February

  1. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் “கவ் மில்க்” எனும் புதிய ஆவின் பால் அறிமுகம்
  2. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் “6வது பொருநை நெல்லை புத்தக திருவிழா”
  3. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறை நூலகம், அரசுப் பள்ளிகூட நூலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்களுக்கு புதிய புத்தகம் வழங்கும் “புத்தகப் பாலம்” என்ற திட்டம் அறிமுகம்
  4. புத்தக நன்கொடைக்கு https://nellaibookfair.in என்ற இணையதளம் அறிமுகம்
  5. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சென்னை மாவட்டம் கடைசி இடமான 38வது இடம், அரியலூர் மாவட்டம் 97.12%-உடன் முதலிடம் இடம் பிடித்துள்ளது
  6. சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழ்நாடு (22.3%) இரண்டாம் இடம் முதலிடம் – கேரள மாநிலம் (24.4%)
  7. சர்க்கரை நோயின் உலகின் தலைநகரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  8. கைப்பேசி செயலி வழியாக தொலகாப்பியத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதியை “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” தொடங்கியுள்ளது.
  9. ஐ.நா.-வின் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு.
  10. பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  11. இந்தியாவில் கரோனோ தடுப்பூசி திட்டத்தால் 34 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிகள் காப்பற்றப்பட்டுள்ளன
  12. கேரளாவில் புதைசாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு ரோபோ அறிமுகம்.
  13. புதைசாக்கடைகளில் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயனபடுத்திய முதல் மாநிலம் கேரளம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
  14. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை மீட்க ஷ்யா சோயுஸ் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
  15.  நோய்சியல் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் ஈரோட்டின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பட்டம் வென்றார்.

Leave a Comment