Tamil Current Affairs – 25th January 2021

சென்னை பல்கலைக்கழகத்தில் 5 கோடி செலவில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமுக வளர்ச்சி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு முன் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழக அரசின் நிதி உதவியுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
|
மத்திய அமைச்சர் கரிராஜ் சிங் இந்தியாவிலேயே முதன் முறையாக அலங்கால மீன்வளர்ப்பு முனையம் தமிழகத்தில் அமையவுள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தினை செயல்படுது்தும். |
அடர்த்தியான மூடுபனி காரணமாக ஊடுருவலின நிகழ்வினை தடுக்கும் நடவடிக்கையை முக்கிய நோக்கமாக கொண்டு ராஜஸ்தானின் மேற்கு எல்லையில் எல்லை பாதுகாப்பு படையால் ஆபரேஷன் சரத் ஹவா (Opeation Sard Hawa) தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த குடியரசு தினத்திற்கு முன்னாதாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது |
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.23-ல் நடைபெற்ற வடகிழக்கு சபையின் 69-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- இந்தக் கூட்டம் மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது.
|
ஒடிசா கடற்கரையில் இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டில் தாயரிக்கப்பட்ட “ஸ்மார்ட் ஆன்டி ஏர்பில்டு வெப்பன்” (Smart Anti-Airfield Weapon (SAAW))-ஐ வெற்றிகராமாக சோதித்துள்ளது.
- இதனை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக் லிமிடெட் தயாரித்துள்ளது
|
மேற்கு வங்க மாநில துர்க்காப்பூரில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CMER) நீர்பாசனம் மற்றும் வேளான் பணிகளுக்காக கழிவு நீரைப் பயன்படுத்தும் முதல் கழிவு நீரைப் பயன்படுத்தும் முதல் கழிவு நீர் தூய்மைப்படுத்தும் தொழில் நுட்பத்தை அக்வா ரீஜிக் (Aqua Rejuv) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளியது.
- இந்த தொழில் நுட்படத்தால் 4 ஏக்கர்கள் விளைநிலங்களுக்கு தேவையான 24,000 லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்
- ஆறு கட்டங்களாக நீரை தூய்மைப்படுத்தும்
|
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியாவிற்கு 4 தலைநகரங்கள் சுழற்சி முறையில் தேவை என கூறியுள்ளார். |
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் ரூர்கி ஐஐடி ஆகியவை ஜன.22-ல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways) ஆய்வு இருக்கையை (Prefessorial Chair) ரூர்கி ஐஐடியில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. |
உலகளாவிய புத்தாக்க பட்டியலில் (Global Innovation Index (GII)) 48வது இடம் பிடித்துள்ளது.
முதல் 50 புத்தாக்க பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது
- ஆய்வு கட்டுரைகள் வெளயிடுவதில் இந்தியா 3 இடத்தில் உள்ளது.
|
ஜீன்.22-ல் கோவாவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு ஷரம்சக்தி (Sharamshakti) என்ற பெயரில் இணையதளத்தினை மத்திய அமைசர்சர் அர்ஜூன் முண்டா துவக்கி வைத்தார்.
- இந்த இணையதளம் வாயிலாக தொழிலாளர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்களை சிறப்பான முறையில் வகுக்க முடியும்.
|
இங்கிலாந்து நாட்டினை சார்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. |
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (All India Council For Technical Educton (AICTE)) மூலம் பொறியில் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு பிரகதி (Pragati) மற்றும் சக்ஷம் (SAKSHAM) திட்டங்ளின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
- சக்ஷம் என்பது பொறியியல் கல்வி பயிலும் மாற்றுத்திறானாளி மணா
|
ஜன.21-ல் நடைபெற்ற சீரம் நிறுவனத்தின தீ விபத்தல் 5 பேர் உயிரிழந்தனர். |
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skills Development Corporation (NSDC)), கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம் லாங் பீச் (California State University Long Beach) உடன் இந்தியாவில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. |
இந்தியாவின் ராணுவ நிபுணர்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவிருக்கும் எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு அமைப்பினை இயக்குவது குறித்த பயிற்சி பெறுவதற்காக ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.
- இந்த அமைப்பினை 2021-ம் ஆண்டின் இறுதியில் ரஷ்யா இந்தியாவிற்கு வழங்குகிறது.
|
ஜன.22-ல் இந்தியா-ஆப்பிரிக்ககா வர்த்தக கவுன்சில் 2021 (India Africa Trade Council 2021) சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் இயக்குநகராக கார்பரேட் கிளினிக் (Corporate Clinic) நிறுவன நிறுவனர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். |
வங்கதேச படைகள் முதல் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது.
ஏற்கனவே குடியரசு தின விழா அணி வகுப்பில் பிரான்ஸ் (2016) அமீரக நாடுகளின் படைகள் (2017) கலந்து கொண்டுள்ளதனால் வங்கதேசம் இவ்விழாவில் பங்கேற்கும் 3வது நாடாகும். |
வங்கதேசத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா தடுப்பூசி வழங்கப்பட்ட நாடுகள்
- நேபாளம் – 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்\
- பூடான் – 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
- மாலத்தீவுகள் – 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
- மொரிசியஸ் – 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
|
ஜன.22-ல் 20 லட்சம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இந்தியா பிரேசிலுக்கு வர்த்தக ரீதியாக அனுப்பியுள்ளது.
- மேலும் சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, மெராக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கரோனோ தடுப்பூசி அனுப்பும் பணியை இந்தியா மேற்கொள்கிறது.
|
கோவிட்-19 கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமதுக்கள் பேராட்டத்தால் ஜன.21-ல் மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் (Ukhnaa Khurelsukh) தனது பதவியை ராஜினாமா செய்தார். |
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோபைடன் அமெரிக்கா & ரஷ்யா இடையே செய்யப்பட்ட ஸ்டார்ட் – ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை (START – Strategic Arms Reduction Treaty) மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க முன்மொழிந்தார்.
- 2010-ல் செக் குடியரசின் தலைநகரமான ப்ராக்கில் கையெழுத்தாகி 2011-ல் நடைமுறைக்கு வந்தது.
|
ஈரான் நாட்டின் அமோவ் ஹாஜி (87) உலகிலேயே அழுக்கான மனிதராக அறியப்படுகிறார்
இவர் கடந்த 67 ஆண்டுகளாக குளிக்கவில்லை |
ஐக்கி அரபு அமீரகம் அமெரிக்காவிடம் இருந்து 50 எப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளது. |
வலிமை வாய்ந்த ஊழல் விசாரணை அமைப்பு ஒன்றை தென்கொரியாவின் ஊழலை தடுக்க உருவாக்கப்ட்டுள்ளது. கிம்ஜின் ஊக் என்பவர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். |
ரூ.3,000 கோடியாக இருந்த பஞ்சாப் & சிந்து வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. |
அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஷ்கார் விருது 2021 (Subash Chandra Bose Aapda Prabandhan Puraskar 2021)-க்கு தேர்வாகியுள்ளனர்.
- இவ்விருது பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கிகரிக்கம் விதமாக வழங்கப்படுகிறது.
- ஆண்டுதோறும் ஜன.23-ல் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில் வழங்கப்படுகிறது.
|
புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கருக்கு பிரெஞ்சு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு வழங்கப்பட்டது.
- உல்லாசத்திருமணம் எனும் தலைப்பில் பிரான்ஸ் எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதிய பிரெஞ்சு நாவலை தமிழில் மொழிபெயர்த்த நூலிற்காக வழங்கப்பட்டுள்ளது.
|
அமெரிக்காவின் மைக்கேல் அண்ட் ஷீலியா ஹெல்டு விருதிற்கு ராமானுஜன் வரைபடத்திற்கு தீர்வு கண்ட இந்திய கணிதவியாலாளர் நிகில் வத்சவா, நீண்ட காலம் தீர்க்கப்டாத காடிசன் – சிங்கர் கணிதத்திற்கும் உள்ளிட்ட 3 பேர் தேர்வாகி உள்ளனர். |
ஜெயந்த் N கோப்ராகேட் (Jayan N Khobragade) ஆசியான் செயலகத்திற்கான (ASEAN Secretariat) இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிஙகப்பூரில் ஆசியான் செயலகம் 1967 ஆகஸ்ட் 8-ல் தொடங்கப்பட்டது.
- இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் இதன் உறுப்பு நாடுகள் ஆகும்
- ஜகார்த்தா (இந்தோனிசியா) இதன் தலைமையிடம்.
|
ஈர்ப்பு அலைகளுக்கான வட அமெரிக்க நானோ ஹெட்ஸ் ஆய்வத்தால் உலகத்தின் ரீங்காரம் (Hum of the Universe) என்பதை கண்டறிந்துள்ளது.
இந்த ரீங்காரமானது ஈர்ப்பு அலைகளால் உருவாகிறதாக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. |
20 வயது வரை உள்ள கபடி அணியில் இராமநாதபுரம் மாவட்ட கடலாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சார்ந்த T. இரஞ்சித் முருகன். M. தங்க நாதன் ஆகிய இருவரும் இந்தோ-நேபாள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை பெற்றனர். |
24th January Current Affairs – Read Here
Related Links
Related