Current Affairs One Liner 25th May
- சென்னை உயர்நீதிமன்றம்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஓய்வு பெற்றதால் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கூடுதல் செய்திகள்
|
- சிங்கப்பூர் – முதலீட்டாளர் மாநாடு
-
- மே 25-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
- தமிழக அரசு, சிங்கப்பூர் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
- சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூ-விற்கு மன்னார்குடியில் சிலையும், நூலகமும் அமைக்கப்பட உள்ளது
- வேர்களைத் தேடி திட்டம்
-
- அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான வேர்களைத் தேடி திட்டம் சிங்கப்பூரில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- காசநோய் பாதிப்பு
-
- தமிழகத்தில் காசநோய் பாதிப்பால் ஆண்டு தோறும் 6% பேர் இறக்கின்றன
- கூடுதல் செய்திகள்
|
- உயர் ரத்த அழுத்த நோய்
-
- தமிழகத்தில் உயர் ரத்த அழுத்த நோய்க்கு 100-ல் 33 பேர் பாதிப்படைகின்றன்
- 32% மட்டுமே தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதாக அறிந்து வைத்துள்ளனர்
- கூடுதல் செய்திகள்
|
- க்ரெயின்ஸ் செயலி
-
- விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பை துல்லியமாக கணக்கிட க்ரெயின் செயலியை தமிழ அரசு அறிமுகம் செய்துள்ளது.
- விஸ்வநாதன்
-
- ஓய்வுபெற்ற பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்கும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- இவர் மேலும் தில்லி தமிழ்நாடு வைகை இல்லம்புதுபிப்பிப்பு ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார்.
- தமிழக செங்கோல்
-
- புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் புனித செங்கோல் நிறுவப்படுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
- 1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் விதமாக தமிழக செங்கோல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது.
- இச்செங்கோல் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினம் உதவியால் உருவாக்கப்பட்டது.
- தற்போது உத்திரபிரதேசம், பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது.
- உலகின் பரிதாபமிக்க நாடுகள் பட்டியல்
-
- உலகின் பரிதாபமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம் கிடைத்துள்ளது.
- முதல் மூன்று இடங்கள் முறையே ஜிம்பாவே, வெனிசுலா, சிரியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
- கூடுதல் செய்திகள்
|
- கர்நாடக பேரவை தலைவர்
-
- கர்நாடக சட்டபேரவையின் 16வது தலைவராக யூ.டி.காதர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
- ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
- இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க குடியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ஹைட்ரஜன் எரிசக்தி பணிக்குழுவின் விதிமுறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது
- பெங்களூர் – துணை தூதரகம்
-
- ஆஸ்திரேலியா துணை தூதரகம் பெங்களூரில் அமைக்கபடுமென ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி அறிவித்துள்ளார்.
- இந்தியாவில் அமைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் 5வது தூதரகம் இதுவாகுகம்
- தில்லியில் தூதரகமும், சென்னை, மும்பை, கொல்கத்தா துணை தூதரகமும் அமைந்துள்ளது
- கூடுதல் செய்திகள்
|
- சர்வதேச தடகள போட்டி
-
- கீரிஸ் – சர்வதேச தடகள போட்டி 2023
- நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் (8.18மீ)
- ஜெஸ்வின் ஆல்ட்ரின் – வெள்ளி (7.85 மீ)
- உலக தைராய்டு தினம் (World Thyroid Day) – May 25
- சர்வதேச காணாமல் போன குழந்தைகளுக்கான தினம் (International Missing Children’s Day) – May 25