Tamil Current Affairs – 25th November 2020
தமிழக முதல்வரால் அவசர உதவிகளுக்கு எளிதில் தொடர்பு கொள்ள தீயணைப்பு துறையின் “தீ” கைபேசி செயலியை தொடங்கி வைக்கப்பட்டது. |
சென்னையில் வீட்டுவசதித்துறை சார்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களையும் (ரூ.45.58 கோடி செலவில்), நெடுஞ்சாலைத்துறை சார்பில் (ரூ27.16 கோடி செலவில்) 9 மாவட்டங்களில் கட்டப்பட்ட 11 பாலங்களையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். |
அந்தமான் தீவில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி (கடந்த 35 நாட்களில் 10 முறை சோதனை நடத்தப்பட்டது). |
நிலவிலிருந்து கல், மணல் ஆகியவற்றை எடுத்துவருவதற்காக ஹய்னான் மாகாணத்தின் வெங்சாய் ஏவுதளத்தில் இருந்து சீனாவின் சாங்கி-5 விண்கலம் வெற்றிகராமாக செலுத்தப்பட்டது. |
நடப்பு நிதி ஆண்டுக்குள் 1,500 தொழில் முனைவோருக்கு எம்எஸ்எம்இ-பிரேரனா திட்டத்தின் கீழ், உள்ளூர் மொழியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. |
மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சம் மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. |
உத்திரபிரதேசத்தில் லவ்ஜிஹாத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர அம் மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
மத்திய பிரதேச அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கான கோமாதா வரியை வசூலிக்க முடிவு செய்துள்ளது. |
நடமாடும் கோவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதைன ஆய்வகத்தை புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தொடங்கி வைத்தார். |
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) பேராசியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு “அடல் அகாடமி” என்ன 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை மத்திய கல்வி அமைச்ர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நவம்பர் 23-ல் தொடங்கி வைத்தார். |
அலைவாங்கி விண்வெளி திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) 2029 தொடங்க உள்ளது. |
பாகிஸ்தானின் லாகூர் “காற்று தரக் குறியீட்டு எண் 306-வுடன்” உலகில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியிலில் மீணடும் முதலிடம் பிடித்துள்ளது. |
படி வளர்ச்சி நாள் (நவம்பர்-24) |
Related Links
Please update daily current affairs
Daily update news usefull exam note collect news