TNPSC Current Affairs in Tamil – 26th & 27th November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 26th & 27th November 2020

டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை அரசு நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 நூலகர்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் திருப்பூரைச் சார்ந்த ஆ.சிவராஜ் எழுதிய “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்ற நாவலுக்கு விருது வழங்கியுள்ளது.
பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த பெண்கள் பட்டியிலில் 100 பெண்களில் 4பேர் இந்திய பெண்கள் அதில் தமிழகத்தை சேர்ந்த இசைவாணி என்றவரும் இடபெற்றுள்ளார்.
டி.பி.எஸ்., – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவீடன் வெள்ளி கிரக ஆய்வு குறித்த இந்தியாவின் “சுக்ரயான்” செயற்கைகோள் திட்டத்தில் இணைந்துள்ளது.
ஆசியாவிலேயே இந்தியா தான் லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளதென ஊழல் கண்காணிப்பு அமைப்பான கரப்ஷன் வாட்ச்டாக்  டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு அறிவிப்பு
அமெரிக்காவின் பருவநிலை விவகாரங்களுக்கான தூதராக ஜான் கொரியை ஜோபைடன் நியமித்தார்.
“சஹாக்கர் பிரக்யா” என்னும் திட்டத்தினை கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சியை அளிப்பதற்காக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் தொடங்கி வைத்தார்.
நவம்.26 முதல் 28 வரை நடைபெறும் 3வது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாட்டு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸட்-2020) பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.

கருப்பொருள் :- நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்

குஜராத்தின் கேவாடியில் நவம்.25-26 ஆகிய தேதிகளில் 80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு நடந்தது.
பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தின் பக்கராவில் மிகப்பெரிய உணவு பூங்காவை மத்திய உணவு பதப்படுத்துல் தொழில்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் திறந்து வைத்தார்.
திருநங்கைகளுக்கான தேசிய இணைய தளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைசர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
பெண் தொழில் முனைவோர்களுக்கான “கிரானா” தி்ட்டத்தை மாஸ்டர்கார்டு மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளது.
கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்.
டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2வது இடம் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்(71) காலமானார்.
சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் (நவம்.26)
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் (நவம்.25)
விமான பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் (நவம்.23 முதல் 27 வரை)

Related Links

Leave a Comment