Tamil Current Affairs – 26th December 2020
இன்று (டிசம்.26) ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத் ஜெய் செஹத் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT Scheme for Jammu & Kashmir) திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார் |
இந்திய வர்ததக தொழில் கூட்டமைப்பு விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (Air Force Sports Control Board (AFSCB)) விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் 2020 என்ற பிரிவில் அறிவித்துள்ளது. |
இந்திய அரசு தனது 42-வது ராம்சார் தளமாகவும், (Ramsar Site) லடாக் யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது ராம்சார் தளமாகவும் சோ கார் சதுப்பு நிலத்தை (Tso Kar) அறிவித்துள்ளது |
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாகனத்திற்கும் 2020 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அமைச்.சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
டிசம்.24-ல் சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர்களின் மறுவாழ்வுக்கு உதவும் வகையிலான ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) செல்போன் செயலி என்ற பெயரில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார். |
மத்திய அமைச்சரவை டைரக்ட் டு ஹோம் (Direct to Home (DTH)) ஒளிபரப்பு சேவைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அங்கிகாரமளித்துள்ளது.
|
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India (SII)) நிமோனியாவுக்கு எதிரான முதல் உள்நாட்டு இந்திய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. |
அஸ்ஸாம் மாநில அலுவல் மொழியாக போடோ (Bodo) மொழியை மாற்றும் மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பசுமை சேனல் அந்தஸ்தை (Green Channel Status) எல் அண்டு டி டிஃபென்ஸ் (L & T Defence) எனப்படும் தனியார் பாதுகாப்பு உற்பத்தி மையம் பெற்றுள்ளது. |
இந்தியா கடலோர கண்காணிப்பு வலையமைப்பை (Coastal Surveillance Network (CSN)) விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக மாலத்தீவு, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் கடலோர ராடார் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. |
குஜராத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் மணிகரன் பவர் லிமிெடட் நிறுவனம் இந்தியாவின் முதல் லித்தியம் சுத்திரிகரிப்பு நிலையத்தினை அமைக்க உள்ளது. |
ராஜஸ்தான் அரசின் சாலை பாதுகாப்பிற்கான தரவு சார்ந்த அமைப்புகள் அணுகுமுறைக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் (Indian Institute of Technology (IIT) கையெழுத்திட்டுள்ளது. |
கோவிட்-19 தடுப்பூசி சந்தை டாஷ்போர்டை (COVID-19 Vaccine Market Dashboard) ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் நிதியம் (United Nations Children’s Fund (UNIFECF))அறிமுகப்படுத்தியுள்ளது. |
டிசம்.21-ல் இந்தியாவும் இஸ்ரேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டன. |
முதன் முறையாக இந்திய சாஃப்ட்பால் விளையாட்டு சம்மேளத்தின் தலைவராக நீத்தல் நரங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். |
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள 2020 தரவரிசைப்படி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4வது இடத்திலும், இந்திய பெண்கள் ஹாக்கி அணி 9வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன
|
Related Links