தமிழகத்தின் கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் (21) சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமனம் செய்யப்பட்டார்.
ஜன.29-ல் தமிழக தலைமைச் செயலாளர்க. சண்முகம் பணி ஓய்வு பெறுகிறார்.
தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளர் ஆவார்
2019 ஜூன் 30-ல் தலைமைச் செயலாளர் ஒய்வு பெற்றதனால் 2019 ஜூலை 1-ல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஜன.25 வாக்காளர் தினத்தினை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளிவிலான தேசிய வாக்காளர் தினத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார்.
1950 ஜனவரி 25-ல் இந்தியாவில் தேர்தல் ஆணையம் அமைக்கபட்டது.
இது இந்தியாவின் 11வது வாக்காளர் தினம் ஆகும்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு சாதுர்யமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்தனால் “வீர தீர செயலுக்காக அண்ணா விருது” வழங்கப்பட்டது.
இவ்விருதுடன் 1லட்சத்திற்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சேலம் டவுண் போலீஸ் ஸ்டேசன்தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு “தமிழக முதல்வர் விருது” வழங்கப்பட்டது.
முதலிடம் – 5,558 புள்ளிகளுடன் சேலம் டவுண் போலீஸ் ஸ்டேசன்
இரண்டாவது இடம் – 1,418.5 புள்ளிகளுடன் திருவண்ணாமலை போலீஸ் ஸ்டேசன்
மூன்றாவது இடம் – 1,242.35 புள்ளிகளுடன் சென்னை ஜே4 கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசன் பிடித்துள்ளன
இந்திய அளவில்சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம்2வது இடத்தை பிடித்துள்ளது.
பிப்ரவரி இறுதியில் இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைகோள்பிஎஸ்எல்வி-சி51 (PSLV-C51) ராக்கெட் மூலம் இஸ்ரோ (ISRO) விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் ஏவுதளத்திலிருந்து பிரேசில் நாட்டின் அமேசானியா-1 (Amazonia-1) செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த ராக்கெட்டில் இந்திய நிறுவனங்களான பிக்ஸஸ் ஸ்டார்ட்அப் மையத்தின் (Pixus Startup Center) “ஆனந்த்”, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் (Space Kids India organization) “சதிஷ்”, பல்கலைக் கழகங்கங்களின் கூட்டமைப்பின் “யுனிவ்சாட்” (Univsat) ஆகிய 3 செயற்கை கோள்களும் சேர்த்து செலுத்தப்பட உள்ளது.
11வது தேசிய வாக்காளர் தினமான ஜன.25-இல் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைதள ரேடியோவினைஹலோ வாக்காளர்கள் (Hello Voters) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டம், தகவல் தொழில் நுட்பத்துறை அமைசர் ரவிசங்கர் பிரசாத் மின்னணு முறையிலான “டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை” (Digital Voter ID) பதிவிறக்கம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த வாக்காளர் அட்டையை “வோட்டர் ஹெல்ப்லைன்” (Voter Helpline) என்ற செல்லிடப்பேசி வாயிலாகும், தேர்தல் ஆணையத்தின் “வோட்டர் போர்ட்டல்” (Voter Portal) என்ற இணயத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1993-ல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது.
ஜன.25-ல் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன்தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை (Chennai Bench of National Company Law Appellate Tribunal) திறந்து வைத்தார்.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மொத்த அமர்வுகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
நீதிபதி பன்சி லாட் பட் இதன் இடைக்காலத் தலைவர் ஆவார்.
6 நாட்களில் இந்தியாவில் 10லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி உத்திரகாண்டில் கல்லூரி மாணவியான சிருஷ்டி கோஸ்வாமி அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக செயல்பட்டார்.
2018 முதல் உத்திரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டப்பேரவையில் சிருஷ்டி முதல்வராக இருந்து வருகிறார்
இந்தியாவில் அந்திய நேரடி முதலீடு 13%. வளர்ச்சி கண்டுள்ளது என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ்ஐ.நா. அமைப்பின் உயிர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜன.25-ல் ஒடிசாவின் சண்டீபூர் கடற்கடை பகுதியிலிருந்துமேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் புதியரகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை இடைமறித்து அழிக்கும் இந்த ஏவுகணையை இந்திய விமானப்படை பயன்படுத்த உள்ளது.
இந்த ஏவுகணையை எளிதாக தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லாம்.
ஜன.21 முதல் 25 வரை முப்படைகளின் கூட்டு ஒத்திகை அந்தமான் நிக்கேபாபர் தீவுகளில் ஆம்பெக்ஸ்-21 (AMPHEX-21) என்ற பெயரில் நடைபெற்றது.
போரில் வீரதீர செயல்புரிந்ததற்கான 2வது உயரிய விருதான “மஹாவீர் சக்ரா விருது”கல்வான் பள்ளதாக்கில் சீன ராணுவத்தினருக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ அதிகாரிகர்னல் சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது முதல் முறையாக போர் அல்லாத மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கார்கில் போருக்கு பிறகு முதன் முறையாக இப்போது வழங்கப்பட உள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலையிடமாக கொண்ட “Global Center on Adaptation” அமைப்பு ஜன.25-ல் சர்வதேச காலநிலை தழுவல் உச்சி மாநாட்டினை (Climate Adaptation Summit) நடத்தியது.
நிகழ் ஆண்டுக்கான பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது-2021 (Rashtriya Bala Puraskar Award-2021) 32 சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, புத்தாக்கம், விளையாட்டு, கலை-கலாச்சாரம், சமூக சேவை, வீரதீரச் செயல்கள் ஆகிய பிரிவுகளில் சாதனைகள் நிகழ்த்தி வரும் தனித்திறமைகள் கொண்ட சிறார்களை தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு வழங்கி வருகிறது.
கலாச்சார பிரிவில் 7பேருக்கும், புத்தாக்கப் பிரிவில் 9 பேருக்கும், கல்வி பிரிவில் 5 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 7 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலிநேபாள ஆளும் கம்யூனஸ்ட் கட்சியிலிருந்து ஜன.25-ல் நீக்கப்பட்டார்.