Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th May 2023

  • தொழில் நுட்ப மையம் திறப்பு
    • புதுமையான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் ரூ.54.61கோடி செலவில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தொழில் நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது.
  • சிபிஐ இயக்குநர்
    • மே 27-ல் சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்றுள்ளார்.
    • அடுத்த இரண்டு ஆண்டு வரை இவர் பதவி வகிப்பார்
    • சிபிஐ இயக்குநரான சுபோத்குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவையொட்டி பிரவீண் சூட் பதவியேற்றுள்ளார்
    • பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவை எதிர்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு  நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கூடுதல் செய்திகள்
    • மத்திய புலனாய்வு முகமை (CBI) 1963-ல் உருவாக்கப்பட்டது.
      • CBI – Central Bureau of Investigation
    • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (CVC) – 1964-ல் உருவாக்கப்பட்டது.
      • CVC – Central Vigilance Commission
  • நிதிஆயோக் கூட்டம்
    • மே 27-ல் பிரதமர் மோடி தலைமையிலான 8வது நிதிஆயோக் நிர்வாகக் குழு கூட்டம்  புதுதில்லியில் நடைபெற உள்ளது.
    • சுகாதாரம், திறன்மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய விவாதம் நடத்தப்பட உள்ளது.
    • மையப்பொருள் – வளர்ந்த பாரதம் 2047 : இந்தியாவின் பங்களிப்பு
  • தொடர்புடைய செய்திகள்
    • திட்டக்குழு – 1950
    • நிதி ஆயோக் – 01.01.2015
    • திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அறிமுகம்
  • வந்தே பாரத் இரயில்
    • உத்திரகாண்டின் டேராடூன் முதல் டெல்லி வரை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • இது உத்திரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை
  • தொடர்புடைய செய்திகள்
  • சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
  • முதல் சேவை : தில்லி-வாரணாசி சேவை
  • இதுவரை இரயில் சேவை தொடங்கப்பட்ட வழித்தடங்கள்
    • சென்னை – மைசூரு
    • தில்லி – வாரணாசி
    • தில்லி – காத்ரா
    • காந்திநகர் – மும்பை
    • தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
    • பிலாஸ்பூர் – நாக்பூர்
    • மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
    • ஹவுரா – நியூ ஜல்பைகுரி
    • செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
    • சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
    • போபால்-தில்லி
    • செகந்திரபாத் – திருப்பதி
    • சென்னை – கோவை
    • அஜ்மீர் – தில்லி கன்டோன்மன்ட்
    • புரி – ஹெளரா
  • ஐஎன்எஸ் விக்ராந்த்
    • அரபிக்கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலில்  மிக் 29கே விமானம் முதல் முறையாக இரவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
  • தொடர்புடைய செய்திகள்
  • ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்கப்பல்
  • 2022 செப்டம்பரில் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • மிக் 29கே விமானம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது.
  • உலக சுகாதார சபைக் கூட்டம்
    • ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் 75வது ஆண்டில் உலக சுகாதர அமைப்பு : உயிர்களைக் காப்பாற்றுதல், அனைவருக்குமான ஆரோக்கிய நலனை கொண்டு சேர்த்தல் என்ற கருப்பொருளுடன்  76வது உலக சுகாதார சபைக் கூட்டம் நடைபெற்றது.
  • உலக நீடித்த மற்றும் நிலையான போக்குவரத்து தினம் (World Sustainable Transport Day)
    • நவம்பர் 26-யை உலக நீடித்த மற்றும் நிலையான போக்குவரத்து தினமாக கொண்டாடும் வகையில் ஐ.நா.பொது சபை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
  • ஆர் தினேஷ்
    • இந்திய தொழிற் கூட்டமைப்பின் (CII) புதிய தலைவராக ஆர்.தினேஷ் பதவியேற்றுள்ளார்.
    • CII – Confederation of Indian Industry
  • ஜுகல்பந்தி
    • கிராமப்புற இந்தியாவுக்கான ஜுகல்பந்தி பன்மொழி AI சாட் மைக்ரோசாப்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
    • ஏ14 பாரத் மற்றும் ஐஐடி சென்னை இணைந்து உருவாக்கியுள்ளன.
    • வாட்ஸ்அப் மூலம் பயன்படுத்தலாம்
    • முதன் முறையாக புதுடெல்லிக்கு அருகேயுள்ள பிவான் கிராமத்த்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது
  • நுழைவு இசைவு
    • பிரிட்டனில் சென்று பணியாற்றுவதற்கும், உயர்கல்வி பெறுவதற்கும் நுழைவு இசைவு (விசா) பெறுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது
  • தென் கொரியா – முதல் வர்த்தக செய்கைக்கோள்
    • தென் கொரியாவால் நூரி ராக்கெட் உதவியுடன் 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
    • செலுத்தப்பட்ட 8 செயற்கைக்கோள்களில் தென்கொரியா முதன் முறையாக வர்த்தக செயற்கைக் கோள் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
    • இவ்வர்த்தக செயற்கைகோள் பூமிக்கு அருகே உள்ள பொருள்களின் காஸ்மிக் கதர்வீச்சை அளவிடுகிறது
  • தொலை தூர ஏவுகணை
    • ஈரானால் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் தொலைதூர ஏவுகணை சோதனையான கொராம்ஷார்-4 சோதனை வெற்றி
    • இந்த ஏவுகணை 1,500 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் சுமந்து செல்லும் திறனுடையது.
  • ரஸ்கின் பாண்ட்
    • The Golden Years : The Many joys of Living a Good Long Life என்னும் நூலினை எழுதியுள்ளார்.

Leave a Comment