TNPSC Current Affairs in Tamil – 27th & 28th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 27th & 28th December 2020

இன்று (டிசம்.28) மயிலாடு துறை மாவட்டம் தமிழ்நாட்டின் 38வது மாநிலமாக உதயமாகிறது. இதனை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்
டிசம்.28-ல் நாட்டின் ஓட்டுநர் (Driver) இல்லாத முதலாவது இரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 • இச்சேவை மெஜந்தா வழித்தடத்தில் (ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ இரயில் நிலையம்) 37கி.மீ தூரம் செயல்படுத்தப்படுகிறது.
டிசம்.28-ல் பயணத்திற்காக “ஒன் நேஷன் ஒன் கார்டு” என்ற என்.சி.எம்.சி அட்டையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

 • இந்த அட்டை மூலம் மெட்ரோ மற்றும் பஸ் சேவைக்காகவும், சுங்கவரி, பார்க்கிங், சில்லறை ஷாப்பிங் உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
சந்தியாரன்-2 விண்கலம் மூலம் பெறப்பட்ட தகவல்களை இஸ்ரோவின் இணையதளம் உள்பட 4 இணையதளங்களில் அதிராகாரபூர்வமாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஐயப்பனின் புகழ் பரப்பும் ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு 2020 ஜனவரி 14-ல் வழங்க உள்ளது.
டிசம்.28-29 வரை முதற்கட்டமாக கரோனோ தடுப்பூசி பரிசோதனை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 • தடுப்பூசி தொடர்பான பணிகளுக்காக “கோ-வின்” என்ற இணையதளம் தாெடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு

 • தேசிய அளவில் தொடர்புக்கு “1075” என்ற தொலைபேசி எண்ணும்
 • மாநில அளவில் தொடர்புக்கு “104” என்ற தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
21 வயதான ஆர்யா ராஜேந்திரன் (மார்க்சிஸ்ட் கட்சி) திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வானார். இதன்மூலம் நாட்டின் மிகஇளைய வயது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தாக்கினால் 7 புதிய அறிகுறிகள் தென்படும் என அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளன..
வரும் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொதுத்தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி செயலாளர் அமித் க்ரே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை தலையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதாரம் மற்றும் வரத்தக ஆராய்ச்சி மையத்தின் ஆண்டறிக்கையில் 2025-ம் ஆண்டுக்குள் 5வது பெரிய பொருளாதார நாடாகா இந்தியா வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • மேலும் 2027-ல் ஜெர்மெனியையும், 2030-ல் ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி 3வது பொருளாதார நாடாகா மாறும் எனவும் தெரிவி
 • க்கப்பட்டுள்ளது.
டிசம்.27-ல் 13-ம் நூற்றாண்டை சார்ந்த சோழர் கால ஆநிரை நடுகல் தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் உள்ளதென தெரிவிக்கபட்டுள்ளது.

மாநிலங்கள் அளவில் சிறுத்தைகள்

 • முதல் இடம் – மத்திய பிரதேசம் (3,421)
 • இரண்டாம் இடம் – மாகராஷ்டிரா (1,690)
 • மூன்றாவது இடம் – தமிழ்நாடு (868) உள்ளதென தெரிவிக்கபட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளித்தளத்திலிருந்து தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர் எஸ்.ரியாஸ்தீன் (18) கண்டுபிடித்த சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

சிறிய செயற்கைக்கோளுக்கு பெமிடோ என பெயரிடப்பட்டுள்ளது

 • 37 மி.மீ உயரமும் 33 கிராம் எடையும் கொண்டது
 • பெமிடா என்பது சிறியது என்று பொருள்
அரசு கலைக் கல்லூரிகளில் கற்போருக்கு “கல்வி கற்போர் உதவி மையம்” திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கப்பட உள்ளது.

Related Links

Leave a Comment