TNPSC Current Affairs in Tamil – 27th & 28th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 27th & 28th January 2021

ஜன.27-ல் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது.

  • 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 3 கட்டிடங்கள் நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வரின் சமாதிக்கு மேற்பரப்பில் பீனிக்ஸ் பறவை கட்டிடம் அமைந்துள்ளது.
  • 8,555 சதுர அடியில் அருங்காட்சியம் சமாதியின் இடது பக்த்திலும், அதே அளவு அறிவுத்திறன் பூங்கா வலது பக்கத்திலும் கட்டப்பட்டுள்ளது.
  • “மக்களால் நான்… மக்களுக்காக நான்…”  “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற மறைந்த முன்னாள் முதல்வரின் பொன் மொழிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சாமாதின் மீது பொறிக்கபட்டுள்ளன.
  • நினைவிடத்தின் நுழைவுவாயிலில் பீடத்துடன் கூடிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளன.
  • நீர் தடாகங்களுடன் சுற்றுச்சூழலை பறைசாற்றும் வகையில் பல அழகிய செடிகளும், மரங்களும் நடப்பட்டு உள்ளன.
  • மியாவாக்கி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
  • எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளது போல ஜெயலலிதாவின் சமாதியிலும் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் ரஞ்சன் தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2020-ம் ஆண்டில் 70,000 பேர் மட்டும் தமிழகத்தில் புதிதாக காச நோயால் பாதிப்படைந்துள்ளன.

  • முந்தைய ஆண்டை விட 37% பாதிப்பு குறைந்துள்ளது.
  • வட மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மகராஷ்டிரா, ராஜாஸ்தான், குஜராத் பாதிப்பு அதிகாக உள்ளது.
தமிகத்தின் சார்பில் பல்லவர்களின் பெருமையை பறைசாற்றும், மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரி அடங்கிய அலங்கார ஊர்தி 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலான அணிவகுப்பில் பங்கேற்றது.

  • நடன கலைஞர்கள் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்ற பாடல் ஒலிக்க அதற்கேற்றவாறு நடனமாடியபடிச் சென்றனர்.
தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தின் காலத்தினை 6 மாதங்களுக்கு 10வது தடவையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • இவ்வாணையம் தமிழக அரசால் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி குமாரசுவாமி தலைமையில் நியமிக்கப்பட்டது.
கொல்கத்தாவின் அழகினைப் பாராட்டும் வகையில் ஹூக்லி ஆற்றில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் இளம் வாசகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் குடியரசுத் தினத்தினை முன்னிட்டு முதன் முறையாக படகில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெர்மெனி பான் நகரின் ஜெர்மன் வாட்ச் (Germanwatch) தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டில் (Global Climate Risk Index) காலநிலை மாற்றத்தால் 2019-ல் அதிகம் பாதிக்கபட்ட நாடுகளில் இந்தியா ஏழாவது இடம் பிடித்துள்ளது.
131 அடி உயரமுள்ள கம்பத்தில் எல்லை பாதுகாப்பு படையினரால் குடியரசு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

  • பிஎஸ்எஃப் படையின் ஜம்மு பிரிவு ஐ.ஜி. என்.எஸ். ஜாம்வால் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட கொடியை இயற்றினார்.
குஜராத் மாநில அரசு மற்றும் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ)) இடையே குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சனந்த் அருகே விரோச்சன் நகரில் இந்தியாவின் மிகப்பெரிய மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவை (India’s largest multi model logistic park) அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜன.27-ல் மகராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அம் மாநிலத்தில் சிறைச்சாலை சுற்றுலா திட்டத்தினை துவக்கி வைத்தார்.

  • பள்ளி, கல்லூரி மாணவர், பொதுமக்கள் அனைவரும் “சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள்” அனுபவித்த இன்னல்களை அறிந்து கொள்ளும் விதமாக சிறைச்சாலை சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • புனேவில் உள்ள ஏரவடா சிறையில் முதற்கட்டமாக இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

  • 8 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.
  • சாலை வரியில் 10முதல் 25% வரையிலான விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
13 வயது சிறுமி அஞ்சலி குமாரி பீகாரில் ஒருநாள் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி சாதனை புரிந்துள்ளார்.
சென்னைப் பட்டினத்தின் நாவப் முகம்மது அலிகானின் மகன் மவுல்லி அஹமதுல்லா ஷா-வின் பெயரை அயோத்தியில் கட்டப்படும் மசூதிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானப்படையின் பாவனாகாந்த், சுவாதி ரத்தோர் ஆகிய 2 பெண் பைலட்கள் 72வது குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

  • மிக்-21, சுகோய் ரக போர் விமானங்களை இயக்குவதில் திறமை வாய்ந்த பாவனாகாந்த் ராஜஸ்தானின் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.
  • சுவாதி ரத்தோர் என்ற மற்றொரு பெண் விமானி குடியரசு தின அணி வகுப்பில் ஃப்ளைபாஸ்ட் எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றார். 4 ஹெலிக்காப்டர்களை வழி நடத்தும் வகையில் எம்ஐ-17 வி-5 ரக ஹெலிக்காப்டரில் பறந்தார்.
குடியரசு தின கொண்டாட்டங்கள் முதன்மை விருந்தினர் இல்லாமல் 55 ஆண்டுகளில் முதன் முறையாக 2021-ம் ஆண்டில் நடைபெற்றது.

  • இதற்கு முன் 1966-ல் முதன்மை விருந்தினர் இல்லாமல் நடைபெற்றது.
தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா வாக்காளர் அவர்களின் தொகுதிக்கு செல்லாமல் நாட்டில் எந்தப் பகுதியிலும் உள்ள நகரங்களிலிருந்து வாக்களிப்பதற்கான புதிய முறை (Remote Voting) சோதனை சீக்கரமாக தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக தேர்தல் ஆணையம் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில் நுடப்பத்தினை உருவாக்கி வருகின்றது.

இந்திய புவியில் ஆய்வு நிறுவனம் தேசிய புவி அறிவியல் தரவு உருவாக்க ஆய்வு நடவடிக்கைகளை (National Baseline Geoscience Data Gereration Programme) விரைவுபடுத்த, தேசிய புவிவேதியியல் வரைபடம் (National Geochemical Mapping (NGCM)), தேசிய புவிஇயற்பியல் வரைபடம் (National Geophysical Mapping (NGPM)), தேசிய வான் வழி வரைபடத் திட்டம் (National Aero Geophysical Mapping Program (NAGMP)) ஆகிய தேசிய அளவிலான ஆய்வுகளை 2024 ஆண்டுக்குள் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளது.
ஜன.26-ல் மக்களைவத் தலைவர் ஓம் பிர்லா குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாரத்பர்வ் 2021 (Bharat Parv 2021) என்ற மெய்நிகர் தேசிய கண்காட்சியை துவக்கி வைத்தார்.

  • இந்நிகழ்ச்சி ஜன.26 முதல் 31 வரை நடைபெறும்.
  • இதில் பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத் தளங்கள், கைவினைப்பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி மகராஜ் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும்.

  • இந்த கட்டுமானப் பணிகளுக்கு ரூ.1,100 கோடி செலவாகும் என அறிவித்துள்ளார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன், புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம், கோவிட்-19 பெருந்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரத்தை “ஆய் சம்வாத்” (எனது உடல் நலன், எனது பொறுப்புடைமை/My Health My Responsibility) என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

  • நாடு முழுவதும் 5 இலட்சத்திற்கும் அதிகமான கருத்தரங்கள் நடைபெறும்
ஜன.20 முதல் 24 வரை இராஜஸ்தானின் ஜோத்பூரின் விமானப்படை நிலையத்தில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகளின் முதலாவது கூட்டு விமானப்படை ஒத்திகை பாலைவன வீரர்கள் ஒத்திகை 2021 (Exercise Desert Knigh-21 (Ex DK-21)) என்ற பெயரில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளின் ரஃபேல் போர் விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றன

2021 ஜனவரி ஜோத்பூரில் இந்தியாவும், பிரான்சும் கூட்டாக பங்கேற்கும் ஸ்கைரோஸ் (SKYROS) என்ற பெயரில் போர் விளையாட்டு ஒத்திகை (Wargames Exericse) நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் இணைந்து செயற்கைகோள் வடிவமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பங்களாதேஷின் குளோபல் லா திங்கர்ஸ் சொசைட்டி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.

  • இந்தியா-பங்களாதேஷ் 50 ஆண்டுகால நட்பினையும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஆண்டு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
3வது தொகுப்பாக பிரான்ஸில் இருந்து மேலும் 3 அதி நவீன ரஃபேல் போர் விமானங்கள் ஜன.27-ல் இந்தியா வந்தடைந்துள்ளது.

  • ரூ.59,000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன்படி

  • 2019 ஜூலை 29-ல் முதல் 5 விமானங்கள் இந்தியா வந்தது.
  • 2019 நவம்பர் 3-ல் இரண்டாவதாக 3 விமானங்கள் இந்தியா வந்தது.
  • இப்போது மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்ததால் இதன் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
ஐ.நா. சபையில் ஐ.நா.வின் மேம்பாட்டு நிதிக்கு 2021-ம் ஆண்டு ரூ.1கோடி வழங்கப்படும் இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஜன.27-ல் இந்தியா சர்வதேச எரிசக்தி முகமையுடன் (International Energy Agency (IEA)) ஒப்பந்தம் ஒன்றில் கேந்திர ரீதியான கூட்டணி வடிமைப்பிற்காக கையெழுத்திட்டுள்ளது.

  • பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை தலைமையிடமாக 1974ல் சர்வதேச எரிசக்தி முகமை அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள கூகிள் (GOOGLE) நிறுவனத்தில் தொழிலாளர்கள் சர்வதேச தொழிற்சங்கத்தை “ஆல்பா குளோபல்” (Alpha Global) என்ற பெயரில் தொடங்கியுள்ளன.

  • கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (ALPHABET) பெயரையே புதிய தொழிற்சங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • இச் சங்கம் யூ.என்.ஐ குளோபல் யூனியனுடன் (UNI Global Union) ஒருங்கிணைந்து  உருவாக்கப்பட்டுள்ளது.
ஜேனட் ஏலன் (74) என்ற பெண் ஒருவர் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாளியரான தேவ் ஜெகதீசனை அமெரிக்காவின் சர்வதேச நிதி கழகத்த்தின் இணை தலைவராக ஜோபடைன் நியமனம் செய்துள்ள்ளார்.
ஜன.28-ல் உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாடு (World Economic Forum’s Davos DIalogue) நடைபெறுகிறது.

நான்காவது தொழில் புரட்சி – மனிதகுலத்தின் நன்மைக்கான தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் (Fourth Industrial Revolution – using technology for the good of humanity) என்பது குறித்து இந்திய பிரதமர் உரையாற்றுகிறார்

அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
காஜா கல்லாஸ் (Kaja Kallas) ஈஸ்டோனியா (Estonia) நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜன.26-ல் ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினம் இந்தியாவின் குடியரசு தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) பால்கன் 9 ராக்கெட் எனும் ஒற்றை ராக்கெட்டின் மூலம் 143 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி புதியதோர் உலக சாதனை படைத்தது.

  • 2017 பிப்ரவரியில் இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒரே ஒரு ஏவலில் 104 செயற்கைக் கோளை அனுப்பி சாதனை புரிந்திருந்தது.
இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சிறந்த வீரருக்கான விருதினை மாதந்தோறும் வழங்க முடிவு செய்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்கரா ராஜஸ்தான் அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொகமது சீஷன் (Mohamed Zeeshan) “Flying Blind : India’s Quest for Global Leader ship” என்ற நூலின் ஆசிரியர்
கவுதம் சிகெர்மான் (Gautam Chikermane) “India 2030 : The Rise of a Rajasic Nation” என்ற நூலின் ஆசிரியர்
ஃபரீத் சகரியா (Fareed Zakaria) “Ten Lessons for a post – pandemic world” என்ற நூலின் ஆசிரியர்.

16th January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment