TNPSC Current Affairs in Tamil – 28th & 29th November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 28th & 29th November 2020

இந்தியாவிலேயே ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் செயல்படும் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மூன்றாவது முறையாக தேர்வானது
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் 6ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராச்சித்துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த தேசிய வேளாண்மை & ஊரக மேம்பாட்டு வங்கியின் 79வது வர்த்த திட்டமிடல் கூடத்தில் தமிழக மண்டல நபார்டு வங்கிகளுக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகள் வரும் கல்வியாண்டான 2011-22-ல் ஐஐடீ, என்ஐடி-களில் தாய்மொழியில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்
கமலேயா என்ற ரஷ்ய அரசு நிறுவனம் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக் வி”  இந்தியாவில் 10கோடி அளவிற்கு தயாரிக்கப்படும் என ரஷ்ய அரசு அறிவிப்பு
அகமதாபாத் -மும்பை இடையேயான 508  கி.மீட்டர் தொலைவில் ரூ24 ஆயிரம் கோடியில் புல்லட் ரெயில் சேவை திட்ட பணிகளை செயல்படுத்தும் ஒப்பந்தமானது எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியுடன் நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் கட்டப்பட்ட மூன்று பள்ளி கட்டிங்களை இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தர் ஷ்ரிங்லா நவம்.27 அன்று திறந்து வைத்தார்
அணுகுண்டின் தந்தையான ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளியை சார்ந்த டாக்டர் கவுரவ் சர்மா நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சி சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 2வது முறையாக வெற்றி அடைந்துள்ளார்.
TX2 என்ற விருதினை உத்திரப் பிரதேசத்தின் பிலிபித் புலிகள் காப்பகம் வென்றுள்ளது.
மணிக்கு 9,600 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர் சோனிக் வகையை சார்ந்த  “14Ts033 நுடோல்” என்ற ஏவுகணை எந்த நாட்டின் செயற்கை கோளையும் தாக்கி அளிக்கும் வல்லமையுடன் ரஷ்யா தயாரித்துள்ளது
நவம் 29-ல் 6 நாடுகள் பிரதமர்கள் பங்கேற்கும் 19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார்
நாம சங்கீர்தனம் மூலம் ஆன்மீக சேவையாற்றிய கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு.
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் (நவம்.29)

Related Links

Leave a Comment