TNPSC Current Affairs in Tamil: 28-10-2020
தேசிய நிகழ்வுகள்
- பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
- இ-போர்டிங் வசதியை ஹைதரபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் இந்தியா முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
- இந்திய-ஆஸ்திரேலிய சுழற்சி பொருளாதார ஹேக்கத்தானை ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அடல் இன்னோவேஷன் மிஷன் டிசம்.7-8ம் தேதிகளில் நடத்துகிறது
- ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்த லடாக் யூனியன் பிரதேசம் நிதி ஒதுக்கீடு
- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கன்டெய்னர்களை நேரடியா கொண்டு செல்லும் “நேரடி துறைமுக நுழைவு வசதியை (டிபிஇ)” தொடக்கம்
- திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில் 262 கி.மீ தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதில் கட்கரி அடிக்கல் நாட்டினார்
- அங்கிதாஸ் முகநூல் நிறுவன இந்திய கொள்கைத் பிரிவு தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்
- பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் 300 காவல்நிலையங்களில் முதல்கட்டமாக பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.
- திங்கள் கிழமை அன்று நாகை மாவட்டம், கோடிக்கரையை பூர்விகமாக கொண்ட மலேசிய கவிஞர்களுள் ஒருவரான வீரமான் (78) காலமானர்
- பாகிஸ்தானை சேர்ந்த 18 பேரை சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஎ) கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு
- சந்திரயான்-1 முதன்முதலில் நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடித்தை நாசாவின் சோபியா விண்கலத்தின் தொலைநோக்கி மூலம் உறுதி செய்துள்ளது
சமீபத்திய வேலைகள்