TNPSC Current Affairs in Tamil – 29th & 30th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 29th & 30th December 2020

பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் இந்திய படைக்கு வலுசேர்க்க அடுத்த (ஜனவரி – 2021) மாதம் இந்தியாவிற்கு வருகை தருகின்றன
டிசம்.28-30 வரை நடைபெறவுள்ள 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழர் பொருளாதார இணையவழி உச்சி மாநாடு மற்றும் 7வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி துவக்கி வைக்கிறார்.
பிரதமர் டிசம்.28-ல் நூறாவது விவசாயிகள் இரயிலை துவக்கி வைத்தார்.

  • இந்த இரயில் மகாராஷ்டிராவின் சங்கோலாவிலிருந்து மேற்கு வங்க ஷாலிமார் வரை செல்லும்
  • முதலாவது விவசாயிகள் இரயில் தேவ்லாலி – தனபூர் இடையே ஆகஸ்.7 2020ல் துவக்கபட்டது. பின் இந்த சேவை முசாப்பூர் வரை நீட்டிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சக செலவீனங்கள் துறையால் வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலமாக ராஜஸ்தான் ஆனது.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (Khadi and Village Industries Commission(KVIC)) அருணாச்சலப் பிரதேச தவாங்கில் உள்ள மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் “மோன்பா காகித ஆலையை” (Monpa Handmade Papaer) தவாங்கில் அமைத்துள்ளது.
டிசம்.27-ல் நடன வரலாற்றாசிரியரும், விமர்சகருமான சுனில் கோத்திரி காலமானார்.
விசாகப்பட்டினம் மாநகராட்சியை சிறப்பாக செயல்படும் குடிமை அமைப்பாக வீட்டு வாரியம் மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) தேர்வு செய்துள்ளது.

  • மிர்சாபூர் – சிறப்பாக செயல்படும் நகராட்சி அமைப்பாகவும்
  • மலிஹாபாத் லக்னோ – நகர் பஞ்சாயத்தில் முதல் இடத்திற்கு தேர்வானது
2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளில் தொற்றுநோய் பிரிவில் (Pandemic Categroy) வெற்றியாளர்களாக பீகார் முதலமைச்சரின் செயலகம் (Chief Minister Secretariat) தேசிய தகவல் மையம் (National Informatics Centre) மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (Disaster Management Department) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உத்திரப்பிரதேச உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை 2020 டிஜிட்டல் இந்தியா விருதை “டிஜிட்டல் ஆளுமையின் சிறப்பு” (Excellence in Digital Govermance) விருதினை வென்றுள்ளது.
மத்தியப் பிரேதச பந்தவ்கர் புலி காப்பகத்தில் இந்தியாவின் முதல் வெப்ப காற்று பலூன் சஃபாரி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியரான ஆயிஷா ஷா ஜோ-பைடனின் டிஜிட்டல் வியூக மேலாளராக அடுத்த மாதம் (ஜனவரி -20 ) பதவியேற்க உள்ளார்.
48 விநாடிகளில் 36 மாநில தலைநகரை கூறி தஞ்சை சாரந்த 2 வயது சிறுவனான ஆதவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
ஏகலைவன் விருது இந்திய ஹாக்கி வீராங்களை நமிதாவுக்கு வழங்கப்பட்டது.
டிசம்.28-ல் ஐசிசி-யின் தசாப்தங்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது

  • ஐசிசியின் டி-20 கனவு அணியின் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு. மேலும் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும் கிடைத்துள்ளது.
  • ஐசிசியின் ஒருநாள் கனவு அணியின் அணிக்கு விராத் கோலி கேப்டனாக தேர்வு.
திருவள்ளூர் மாவட்ட பெருமாள்பட்டு கிராமத்தை சார்ந்த எல்.ஹபினேஷ் உலக கோப்பை பளு தூக்குதல் சப்ஜூனியர் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்றார் .
அமெரிக்க டாலருக்கு நிரகான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் அதிகரித்துள்ளது.

Related Links

Leave a Comment