Tamil Current Affairs – 29th January 2021

ஜன.27-ல் தமிழகம் உள்பட 18 மாநிலங்களுக்கு ரூ.12,351.5 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக விடுவித்துள்ளது.
- ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராமம், தாலுகா, மாவட்டம் என மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு மானியங்களை அளிக்க நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
- மொத்த ஒதுக்கீட்டில் அடிப்படை மானியம் 50%, வரையறுக்கப்பட்ட மானியம் 50% என இரண்டு விதமாக மத்திய அரசு வழங்குகிறது.
- 2020-21-ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகைகள் மாநில வாரியாக
-
- தமிழகம் – ரூ.1,803 கோடி
- ஆந்திரா – ரூ.3,137 கோடி
- மகாராஷ்டிரா – ரூ.4,370 கோடி
- உத்திரபிரதேசம் – ரூ.7,314 கோடி
|
48 நாட்களுக்கு யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் தேக்கம்பட்டியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஆண்டுதோறும் கோவில் & மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், முறையாக பராமரிக்கவும், புத்துணர்வு அளிக்கவும் இம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
|
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை (பிப்.24) அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். |
21%க்கும் குறைவான முன்களப்பணியாளர்கள் மட்டுமே தமிழ்நாடு, டெல்லி, ஜார்கண்ட், உத்திரகாண்டி, சட்டீஸ்கர், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார். |
ஜன.28-ல் பல்லவர்கால சிலை காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரேமரூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
500 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன் & போர் வீரனின் நடுகற்கள் விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
ஜன.22 முதல் 23 வரை நடைபெற்ற தேசிய கூட்டுறவு வங்கியின் (National Cooperative Bank) உச்சி மாநாட்டில் ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.இஸபெல்லாவுக்கு “ஆண்டின் சிறந்த பெண் தலைவர் விருது” (“Best Female Leader of the Year Award”) வழங்கப்பட்டது.
- ரெப்கோ வங்கிக்கு “சிறந்த இலக்க முறை வங்கி”, ” சிறந்த மோசடிகட்டுப்பாட்டு முயற்சி” ஆகிய விருதுகளுகம் கிடைத்துள்ளது
- 1969-ல் பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக ரெப்கோ வங்கி துவக்கப்பட்டது.
|
குடியரசுத்தலைவரின் உயரிய விருதான பரம் விஷிஷ்ட் சேவா விருது (Param Vishisht Seva Award) இந்தியக் கடலோர காவல்படை இயக்குநர் நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை கடலோர காவல்படையின் இயக்குநர் பெறுவது முதன்முறையாகும்.
|
சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கான பொதுப்பிரிவு போட்டியில் இடம் பிடித்துள்ளது.
- கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிமாக பார்க்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற சாதனையை படைத்தது.
|
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இ-கியாஸ்க் (E-kiosk) தானியங்கி இயந்திர மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி என தெரிவித்துள்ளார்.
- இந்த இயந்திரம் ஓவ்வாரு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.
- இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ (or) சிதைந்து விட்டாலோ இங்கு அச்சிட்டுக் கொள்ளலாம்.
- புதிய வாக்காளர் அடையாள அட்டைகளும் அச்சிட்டுக்கு கொள்ளலாம்.
|
ஜன.25-ல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையின் 13வது தவணை தொகையாக ரூ.6,000 கோடியை ஓதுக்கீடு செய்துள்ளது.
- இதில் தமிழகத்திற்கு ரூ.339.70 கோடியும், புதுச்சேரிக்கு 39.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|
வந்தே பாரத் ரயில்களுக்கான மோட்டார்கள் மற்றும் உதரிபாகங்கள் வாங்குவதற்கான டெண்டர் இறுதியானதால் 44 அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான பணிகள் சென்னை ஐசிஎப் உள்பட 3 இடங்களில் விரைவில் தொடங்கவுள்ளன.
- இதன் படி சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் இரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்)-24., ஆர்சிஎப்-10, எம்சிஎப்-10 என 44 அதிநவின ரயில்கள் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- சென்னை பெரம்பூர் ஐசிஎப்-ல் முதல் முறையாக ரூ.97கோடியில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் அதிநவீன “ரயில் 18” விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது.
- மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த இரயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) என பெயரிடப்பட்டு புதுதில்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகிறது.
|
தேனி மாவட்டம் சின்னமனூரில் 10-ம் நூற்றாண்டை சார்ந்த தவ்வை என்ற மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
கடும் கட்டுப்பாடு காரணமாக டிக்-டாக் செயலி தனது சேவையை இந்தியாவில் முழுமையாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. |
இந்திய, வங்கதேச மாணவர்கள் ஸ்பேஸ் கிட்ஸ் (Space Kids) வழிகாட்டுதலுடன் தயாரிக்கும் செயற்கைகோளுக்கு “வங்கம்-பாரத் மாணவர் செயற்கைக்கோள்” (Bengal-Bharat Student Satellite) என பெயரிடப்பட்டுள்ளது. |
மத்திய அரசு சார்பில் ஆந்திரம், கர்நாடகா, பஞ்சாப், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்பட 15 மாநிலங்களில் 9 திட்டங்கள் ரூ.54,675 கோடி மதிப்பில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இதில் மத்திய இரயில்வே, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பில் தலா 3 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறை ஆகியவை சார்பில் தலா ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
|
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீப்பாயத்தின் சென்னை கிளையை திறந்து வைத்தார்.
- நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சமரச தீர்வு காண கம்பெனிகள் சட்டம் – 2013 பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (National Company Law Tribunal (NCLT) நாடு முழுவதும் 2016-ல் தொடங்கப்பட்டன.
- இதன் 16 அமர்வுகள் சென்னை உள்படபல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
|
மத்திய அரசின் பவர் பைனான்ஸ் (Power Accounting) மற்றும் ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவனம் (Rural Electrification Company) தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.11,000 கோடி கடன் வழங்கியுள்ளன. |
ஜன.31-ல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
- 43,000 முகாங்களின் மூலம் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
|
இன்று முதல் (ஜன.29) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
- கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது.
- இரண்டாம் அமர்வு மார்ச்-8 முதல் ஏப்ரல்-8 வரை நடைபெறுகிறது.
- பிப்.1-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
|
எப்-15 இஎக்ஸ் (F-15 EX) ரக போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் க்ரீபன் (Greiben), பிரான்சின் ரபேல் போர் விமானங்களை போல் எப்-15 இஎக்ஸ் நவீன போர் விமானத்தை போயிங் நிறுவனம் (Boeing Company) வடிவமைத்துள்ளது |
ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஸெனகா (Oxford-AstraZeneca) உருவாக்கியுள்ள கரோனோ தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையிலிருந்து பிரிட்டன் அஸ்ட்ராஸெனகா விலகியது. |
இந்திய சீன உறவை மேம்படுத்த 8 அம்ச கோரிக்கைகளை 13வது அகில இந்திய மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார். |
அந்தோணி பிளிங்கன் (Anthony Blingen) அமெரிக்காவின் 71வது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். |
எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பில் (FMSCI National Racing Championship) உத்திரகண்ட் வீராங்கனை அனுஷ்ரியா குலாட்டி (Anushriya Gulati), எல்ஜிபி-4 மற்றும் மகளிர் பிரிவு இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றார். |
இந்தியாஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக ஜோபைடன் அதரவு அளித்துள்ளார்.
ஏற்கனவே ஜார்ஜ் டயிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொன்ல்டு ட்ரம்ப் இதே கருத்தினை வலியுறுத்தியுள்ளனர். |
ஜன.28-ல் இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய 5லட்சம் கரோனா தடுப்பூசிகளை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்சே பெற்றுக் கொண்டார். |
ஜன.25-ல் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 18வது தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான (National Federation Cup) ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி(Junior Athletics Championship)-யில் 100 மீ மகளிருக்கான 20 வயதிற்குட்பட்டோர் ஸ்பிரின்ட் பந்தயத்தில் (In sprint racing) தில்லியின் தரன்ஜீத் கெளர் வெற்றி பெற்றார். |
2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை இந்தியாவில் மகளிருக்கான ஆசிய கால்பந்து போட்டி நடைபெற உள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும் 2022-ல் 17வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலககோப்பை போட்டியையும் நடத்த உள்ளது
- ஏற்கனவே 2016-ல் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியையும்,
- 2012-ல் 17வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்து போட்டியையும் இந்தியா நடத்தியுள்ளது
|
ஜன.25-ல் மா.கேசவன் எழுதிய “வரலாறு மிக்க கருங்குழி” நூல் வெளியீட்டு விழா மதுராந்தகம் வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயில் வெளியிட அதனை மதுராந்தகத்தின் கோட்டாசியர் சி.லட்சுமி பிரியா பெற்றுக்கொண்டார். |
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகர் சி.ஆர். பார்த்திபன் (90) காலமானார். |
இந்திய செய்தித்தாள் தினம் (ஜன.29) |
இந்திய விளம்பர தினம் (ஜன.29) |
27th-28th 25th January Current Affairs – Read Here
Related Links
Related