மின்சார வாகனம் வாங்குவோருக்கு வரும் 31-12-2022 வரை 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலுள்ள 963 ரயில் நிலையங்கள் இதுவரை சோலார் மயமாக்கப்பட்டுள்ளன. 2030 க்குள் அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஒய்வு பெறும் அதேநாளில் ஓய்வூதிய ஆணை வழங்குவதற்காக இபிஎஃப் பிரயாஸ் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. (1011 கி.மீ )
நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
46வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்.
இத்தாலியில் நடைபெற்ற எமிலா கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரபல வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் 5 வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றுள்ளார் ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லேவ்.
பேட்டில் ஆஃப் பிலாங்கிங் (The Battle Of Belonging) என்ற புத்தகத்தை சசி தரூா் எழுதியுள்ளார்.
கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.