TNPSC Current Affairs in Tamil – 2nd January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 2nd January 2021

தமிழக அரசு ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கான கலைச் செம்மல் விருதின் தொகையை ரூ50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜன.1-ல் ஆரணி தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட “நம்ம திருவண்ணாமலை” என்ற மொபைல் செயலியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
மணமகள் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவங்களில் திருமணத்தை பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009-ல் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.1-ல் ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் உலகாளவிய வீட்டு வசதித் தொழில் நுட்பங்கள் அடிப்படையில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்தினை (Light House Projects (LHPs)) பிரதமர் துவங்கி வைத்தார்

ஆறு இடங்கள் – சென்னை (பெரும்பாக்கம்), இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோ

கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான ஜி.எஸ்.ஆர் நிறுவனம் நீரிலும், கரையிலும் இயக்கக் கூடிய 8வது எல்சியு கப்பலை கடற்படையிடம் வழங்கியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பாஸ்டேக் முறை அமல்படுத்த கால அவகாசம் பிப்.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜன.1 முதல் 10 இலக்கம் கொண்ட செல்போன் எண்ணை லேண்ட்லைனில் இருந்து அழைக்கும் போது முதலில் பூஜ்ஜியம் சேர்க்கும் நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க்பட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • சீரம் – கோவிஷீல்டு
 • பாரத் பயோடெக் – கோவாக்சின்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்க இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கோவேக்சின்.

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தம் அல்லாத உறுப்பினராக எட்டாவது முறையாக, ஜனவரி 2ம் தேதி இணைந்துள்ளது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா பொறுப்பு வகிக்க உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தம் அல்லாத உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

மார்ச் 31 வரை ஹெச் 1பி விசா (H1B-Visa) தடையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நீடித்துள்ளளார்.
ஜன.1-ல் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணுசக்தி நிறுவல்களின் பட்டியலை பறிமாரிக் கொண்டன.
ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனிஷியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு நாடுகளுடன் கடல்சார் தேடல் & மீட்பு நடவடிக்கைகளில் (Maritime Search and Rescue (M-SAR) Operations) ஒத்துழைப்பதற்காக இந்திய கடலோர காவல் படை (Indian Coast Guard (ICG)) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2021 புத்தாண்டை கொண்டாடிய முதல் இடம் ஓசியானியா (Oceania).

புத்தாண்டை வரவேற்ற முதல் நாடுகள்

 • டோங்கா, சமோவா & கிரிபட்டி

புத்தாண்டை வரவேற்ற கடைசி நாடுகள்

 • அமெரிக்காவிற்கு அருகிலுள்ள ஹவுலேண்ட் & பேக்கர் தீவுகள்
பழங்குடிகளுக்கு பெருமையளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளைமையான சுதந்திர நாடு என்பதை ஒன்றுபட்ட சுதந்திர நாடு என மாற்றியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனைகளின் வளர்ச்சிகளை அளவிட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறியீட்டை (Digital Payment Index) வெளியிட்டுள்ளது.
பங்கு ஆணையங்களின் சர்வதேச அமைப்பின் (International Organization of Securities Commissions (IOSCO)) உறுப்பினராக சர்வதேச நிதிச் சேவைகள் மையங்களின் ஆணையம் (International Financial Services Centres Authority (IFSCA)) இணைந்துள்ளது.
2020 செப்டம்பரில் முடிவடைந்த 2வது காலாண்டின் கடைசி நிலவரப்படி ரூ.107.04 லட்சம் கோடியாக மத்திய அரசின் கடன்சுமை அதிககரித்துள்ளது.

 • நவம்பர் மாத வரை நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜன.1 முதல் வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்குள் விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் இனி 3மாதங்களுக்கு ஒருமுறை (காலாண்டுக்கு ஒருமுறை) ஜி.எஸ்.டி. ரிட்டன்-3பி தாக்கல் செய்யும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்குவிக்கும் வகையில் கான்டாக்ட் லெஸ் வகை கிரெடிட் கார்டுகளில் பரிவர்த்தனை செய்யும் வரையறை ரூ.2000-தில் இருந்து ரூ.5000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
4 ஆசிய தேயிலை சாகுபடி தளங்களை உலகளில் முக்கியமான விவசாய பாரம்பரிய அமைப்புகள் என்று ஐ.நா. சபையின் உணவு & வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.

 1. பு’யர் பாரம்பரிய தேயிலை வேளாண் அமைப்பு – சீனா
 2. புஜோ மல்லிகை மற்றும் தேயிலை கலாச்சரா அமைப்பு – சீனா
 3. ஷிசுவோகா பராம்பரிய தேயிலை – புல்  ஒருங்கிணைந்த அமைப்பு –  ஜப்பான்
 4. ஹ்வாகே-மியானில் பபாரம்பரிய ஹடோங் தேயிலை வேளாண்மை அமைப்பு –  தென்கொரியா
Dec.30-ல் மெய்நிகர் விருது விழாவில் குடியரசுத்தலைவர் 6வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் (6th digital India Awards (DIA)) 2020ஐ வழங்கினார்.

இந்த ஆண்டில் (2020)

 • தொற்று நோய் புதுமை பிரிவு (Innovation in Pandemic Category)
 • முன்மாதிரியான தயாரிப்பு (Exemplary Product Category)

ஆகிய இரண்டு புதிய உட்பிரிவுகள் அறிமுகப்படுத்ப்பட்டுள்ளன.

முழு திட எரிபொருள் ராக்கெட் கட்டத்தை வெற்றிகராமாக வடிவமைத்து, மேம்படுத்தி மற்றும் சோதனை செய்த இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
ஜன.1-ல் சோமா மொண்டல் இந்தியாவின் எஃகு ஆணையத்தின் (Steel Authority of India (SAIL) முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
63வது நிறுவன தினத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation – DRDO) ஜன.1-ல் கொண்டாடியது.

DRDO உருவாக்கப்பட்ட ஆண்டு – 1958

கோவாவினை சார்ந்த 14 வயது சிறுவன் லியோன் மெண்டோன்கா இந்தியாவின் 67-வது செஸ் கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.
தமிழக & கேரளா அணிகள் பங்குகொண்ட ஐவர் கால்பந்து போட்டியில் இரயுமன் துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1st January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment