TNPSC Current Affairs in Tamil – 2nd March 2023

TNPSC Current Affairs 2nd March 2023

Current Affairs One Liner 2nd March 2023

  • அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, வெளிநாட்டுச் சுற்றுலாவுடன் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு.
  • சென்னையில் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரல் தொற்று காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் ஆர்எஸ்வி வைரஸ் தொற்றும் பரலாக உள்ளது.
  • ஒருங்கிணைந்த நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை சேகரிப்பவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 20-30 வயது உள்ள பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது.
  • உலக புற்றுநோய் தினத்தினைமுன்னிட்டு சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
  • 2023 பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,577 கோடி
  • ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின்  ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • இந்திய விமானப்படைக்கு ரூ.6,828 கோடியில் 70 ஹெச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை வாங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
  • இந்திய கடற்படைக்கு 3 பயிற்சி போர்க் கப்பல்களை கட்டமைக்க லார்ச் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியாவின் முதல்  மின்சார விரைவு சாலை டெல்லி-ஜெய்ப்பூர் இடையே அமைகிறது.
  • தடை செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்தியதற்காக இந்திய தடகள வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவுக்கு 4 ஆண்டுகள் தடை

Leave a Comment