TNPSC Current Affairs in Tamil: 02-10-2020
தமிழக நிகழ்வுகள்
- தமிழ்நாடு மற்றும் அருணாச்சலபிரதேசம் ஆகிய இன்னும் இரண்டு மாநிலங்கள் அக்டோபர் 1 அன்று “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தில் இணைந்தன. இதன் மூலம் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தற்போது இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
- மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாரய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.40,000/-தை தமிழக முதல்வரால் 2021, ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினத்தன்று வழங்குகிறார்.
தேசிய நிகழ்வுகள்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்கத்தின் செயலாளராக அபூர்வ சந்திரா (ஐ.ஏ.எஸ்) பொறுப்பேற்றார்.
- “10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோமீட்டர்” நீளத்தில் அமைக்கபட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுங்சாலையான அடல் சுரங்க பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்
- மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினமான நாளை, தூய்மை இந்தியா திட்டத்தின் 6-வது ஆண்டு விழாவை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகம் கொண்டாடுகிறது. அக்டோபர் 2-ல் ராஜ்காட்டில் ஸ்வச் பாரத் பணி தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டில் ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் 18.4% சரிந்துள்ளது.
- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியாக ஜவகர் ரெட்டி என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- குவைத் அரசர் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபர் அல்-சபா(91) மறவையொட்டி இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நடப்பாண்டு செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ 95,480 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- குடியரசுத்தலைவர், பிரதமர் பயன்படுத்துவற்காக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட போயிங் நிறுவனத்தின் 777 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது
- வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகர் ஆகியவற்றின் டிஜிட்டல் நகல்களை காண்பித்தாலே போதுமானது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றுகளின் நகல் இன்று முதல் சட்டப்பூர்வமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
- 02.10.2020 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப்பொருட்கள் மற்றும் கரிம பொருள் சந்தையான ட்ரைப்ஸ் இந்தியா இ-மார்க்கெட்ப்ளேஸ் (market.tribesindia.com) மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டோ தொடங்கி வைக்க உள்ளார்.
- பெய்ஜிங்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனமான ஆரிஜின்ஸ்பேஸ், உலகின் முதல் சிறுகோள் சுரங்க ரோபாவை 2020 நவம்பரில் விண்வெளிக்கு அனுப்ப தயாராக உள்ளது.
- தேசிய துப்பாக்கி சுடுதல் அணியினருக்காக கார்ணி சிங் துப்பாக்கி சுடும் தளத்தையும் இந்திய விளையாட்டு ஆணையம் திறந்துள்ளது.
இன்றைய முக்கிய தினங்கள்
“உலக அகிம்சை தினம்” கருப்பொருள் – “Shaping Peace Together”
More Current Affairs – More Info
சமீபத்திய வேலைகள்