Tamil Current Affairs – 30th January 2021

ஜே. சுவாமிநாதன், அஷ்வினி குமார் திவாரி ஆகியோர் பாரத் ஸ்டேட் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர்களுகாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஜே. சுவாமிநாதன் என்பவர் தலைமை மின்னணு அதிகாரியாக பணியாற்றியபோது யோனோ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
|
அலர்ட் (Alert) அமைப்பால் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் அலர்ட் பியிங் ஐகான் விருது-2020 (Alert Being ICON Award – 2020) ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. |
ரூ.1,67,10,982 நிதியை யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமினை நடத்த தமிழக அரசு ஒதுக்கியது. |
ரூ.52,257 கோடி மதீப்பீட்டில் 34 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ஐ வெளியட அனுமதியளிக்கப்பட்டது. |
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு (அபேடா) தலைவர் டாக்டர் எம்.அங்கமுத்து பத்ம ஸ்ரீ விருதினை பெற்ற பாப்பம்மாளை “அங்கக வழி (இயற்கை வழி) விவசாய உற்பத்தியாளர்களின் தூதர்” என்ற விருதினை ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். |
இஸ்ரோவின் தலைவரான கே.சிவன் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை கண்டறியும் வகையில் செயற்கைகாேள் தரைதள கட்டுபாட்டு மையத்தை ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியல் தொழில் நுட்பக்கல்லூரியில் துவக்கிவைத்தார்.
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோளுக்கு ஜேஐடி என பெயரிடப்பட்டுள்ளது. பிப்.28-ல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. |
இந்தியாவில் முதல் கரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி ஜன.29-டுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. |
ஜிடிபி 11% வளர்ச்சியை 2021-2022 நிதியாண்டில் எட்டும் என பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ரூ.31,500 கோடி முதலீட்டில், ஆண்டிற்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெயை சுத்திகரிக்கும் வகையில் நாகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளதென அந்நிறுவன தலைவர் எஸ்.எம். வைத்யா தெரிவித்துள்ளார். |
ரூ.1,751.05 கோடியை அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா உள்பட 5 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில வாரியாக வழங்க உள்ள தொகைகள்
- அஸ்ஸாம் – ரூ.437.15 கோடி
- அருணாச்சலப்பிரதேசம் – ரூ.75.86 கோடி
- ஒடிசா – ரூ.320.94 கோடி
- தெலுங்கா – ரூ.245.96 கோடி
- உத்திரபிரதேசம் – ரூ.386.06 கோடி
|
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 2020 டிசம்பர்-ல் 1.3% என பின்னடைவை அடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
இந்தியா கரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு கொடுத்து உதவியதை ஐ.நா.-வின் பொதுச்செயலளார் அன்டோனியா குட்டெரெஸ் பாராட்டினார்.
- “அண்டை நாட்டவருக்கே முன்னுரிமை” என் கொள்கையின் அடிப்படையில் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம் உள்பட பல நாடுகளுக்கு இந்தியா கரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது.
|
ஆசிய பசுபிக் அமெரிக்க சமூக மேம்பாட்டுக்கான கூட்டணி-யின் ஆய்வறிக்கையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அமெரிக்க குடும்பத்தின் சாராசரி ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் (ரூ.87 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் ஆண்டு வருமானம் – 45,348 டாலர்
- கருப்பின குடும்பத்தினர் ஆண்டு வருமானம் – 41,511 டாலர்
- லத்தின் இனத்தவர் ஆண்டு வருமானம் – 51,404 டாலர்
|
இலங்கையின் சாகித்ய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரும், ஈழ இலக்கியவாதியான டொமினிக் ஜீவா காலமானர். |
உலக தொழுநோய் தினம் (ஜன.30)
குறிப்பு ; இந்தியாவில் ஜன.30-லிலும், உலக நாடு முழுவதும் ஜன.31-லிலும் அனுசரிக்கப்படுகிறது
கருப்பொருள் ; Beat Leprosy, End Stigma and Advocate for Mental Well-Being |
29th January Current Affairs – Read Here
Related Links
Related