Tamil Current Affairs – 31st December 2020
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலப் பிரிவில் தமிழக அரசுக்கு “டிஜிட்டல் இந்தியா 2020” தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார். |
தமிழக மருத்துவர் ஜெயபால் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். |
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனால் லே-பகுதியில் 3500மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகவும் உயரமான வானிலை மையம் திறந்து வைக்கப்பட்டது. |
நிரஞ்சன் பனோத்கர் யெஸ் வங்கியின் (YES Bank) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
|
பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனோ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
|
மத்திய அமைச்சரவை ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. |
ரூ.7,725 கோடி மதீப்பீட்டில் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட (சிபிஐசி) திட்டத்தின் கீழ் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டணம், கர்நாடகாவின் துமகுருவில் தொழில் முனையம், நொய்டாவில் மல்டி லாஜிஸ்டிக் மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது |
மத்திய அமைச்சரவை எஸ்தோனியா, பராகுவே, டொமினிக் குடியரசு நாடுகளில் ஒப்புதல் இந்திய தூதரகம் அமைக்க அளித்துள்ளது. |
எச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய தலைவர் சியமாளா கோபிநாத்தின் பதவிகாலம் முடிவடையும் நிலையில் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலர் அதானு சக்கரவர்த்தி பெயரை ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. |
டிசம்.29-ல் பிரதமர் மோடி உத்திரபிரதேச நியூபாபுர் முதல் நியூ குர்ஜா வரையிலான (351கிமீ) சரக்கு ரயில் சேவைக்கு தனி வழித்தடத்தினை தொடங்கி வைத்தார்.
|
கோவா மாநிலத்தின் தடை செய்யப்பட்ட கஞ்சா செடியினை இனி மருத்து பயன்பாட்டிற்கு மட்டும் பயிரிடலாம் என அம்மாநில சட்டத்துறை சட்ட ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது |
போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தால் வாகனத்தை புதுபிக்க காலாவதி சான்று தேவையில்லை என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. |
2021 ஏப்ரல் 1 முதல் கார் ஓட்டுனர் இருக்கை மட்டுமல்லாமல் முன்சீட்டினிலும் ஏர்பேக் வைக்கப்படுவது கட்டாயமாக்க பொருத்தப்பட வேண்டும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. |
சீனாவின் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங்மார்ச்-4சி ராக்கெட் உதவியுடன் யோகன் வெய்க்சிங்33ஆர் (Yohan Weixing 33R) தொலையுணர்வு செயற்கைகோளை விண்ணில் சீனா ஏவியது. |
இந்தியாவில் அமேசான் நிறுவனம் 2019-20 நிதியாண்டில் ரூ.11,400 கோடியை முதலீடு செய்துள்ளது. |
Related Links