Tamil Current Affairs – 31st January 2021

முன்னாள் தலைமை செயலாளரான க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 46 தலைமை செயலாளராக பணியாற்றியவர்
|
மதுரை மாவட்டத்தின் திருமங்கலம் அருகிலுள்ள டி.குன்னத்தூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவாக கோயில் கட்டப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதவர்களான எம்.ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் ஆளுயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்தக் கோயில் தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ளது
|
என்.எல்.சியின் முதல் அனல் மின்நிலையம் ஓய்வு பெற்றது.
- 30.09.2020-டுடன் தனது இயக்கத்தை நிறுத்தியது.
- நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை பயன்டுத்தி மின்சாரம் தயாரித்த முதல் தெற்காசிய அனல் மின் நிலையமாகும்.
- சோவியத் ரஷ்யாவின் தொழில் நுட்பத்தில் உருவான இந்த அனல் மின் நிலையமானது காமராஜரின் கடும் முற்சியால் உருவாக்கப்பட்டது.
|
அமெரிக்க நிறுவனமான தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) வெளியிட்ட 2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அறிவியல் வெளியீட்டில் (SCIENTIFIC PUBLICATION) தரவுகளின் அடிப்படையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
சீனா, அமெரிக்கா முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது |
இந்தியா ஊழல் புலனறிவு குறியீடு-2020 (Corruption Perceptions Index)-ல் 86வது இடத்தினை பிடித்ததுள்ளது.
- டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேசனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில் ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து & டென்மார்க் முதலிடத்தை பெற்றுள்ளன.
- ஊழல் உள்ள நாடுகளின் பட்டியிலில் சோமாலியா & தெற்கு சூடான் முதலிடத்தை பெற்றுள்ளன.
|
18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் சிறந்த நீதி வழங்கலுக்கான முதல் ஐந்து இடங்களை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் இந்திய நீதி அறிக்கை 2020 (Edition of India Justice Report 2020)ன் படி பெற்றுள்ளன.
திரிபுரா, சிக்கிம், கோவா, இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் ஆகியன சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. |
மத்தியபிரதேச குவாலியர் பகுதியில் இந்து மகாசபை சார்பில் மகாத்மா காந்தியினை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது. |
கரோனாவுக்கு உலகளவில் பலியானோர்களின் எண்ணிக்கையில் மெக்சிக்கோ 3வது இடத்திற்கு வந்த காரணத்தினால் இந்தியா 4வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
- அமெரிக்கா, பிரேசில் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.
|
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு சொந்தமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் (Scooters India Limited (SIL)) தொடர் நஷ்டங்களினால் இயங்கி வந்ததால் இந் நிறுவனத்தினை மூடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1972-ல் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவினை தலையிடமாக கொண்டுள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிெடட் நிறுவனம் நிறுவப்பட்டது. |
இந்தியா ஆசியா-பசுபிக் தனிநபருக்கான சுகாதார குறியீட்டில் (Asia-Pacific Personalised Health Index) 10வது இடத்தினை பிடித்துள்ளது.
சிங்கப்பூர், தைவான், ஜப்பான் ஆகியநாடுகள் முதல் 3 இடங்களினை பிடித்துள்ளன. |
தேசிய போர் நினைவகத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் பலியான 20 வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2020 ஜூன் 15-ல் இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் மோதல் வெடித்ததில் இந்திய வீரர்கள் 20பேரும், சீன வீரர்கள் 43 பேரும் உயிரிழந்தனர் |
காஷ்மீரின் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் இந்தியாவின் முதல் “பனிக்குடில் உணவகம்” தொடங்கப்பட்டுள்ளது. |
புத்தகயாவில் இந்தியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- 100 அடி உயரம் உள்ள இதற்கான செலவினை புத்தா இன்டர்நேஷனல் வெல்பேர் மிஷன் (Buddha International Welfare Mission) அமைப்பு ஏற்றது
|
ராஜாஸ்தான் மாநிலம் நகர்புற உள்ளாட்சி சீர்திருத்தங்களை (Urban Local Bodeis reforms) வெற்றிகரமாக அமல்டுத்திய மாநிலங்களின் பட்டியலில் 5 மாநிலமாக இணைந்துள்ளது.
- ஆந்திரா, மத்தியபிரதேசம், மணிப்பூர், தெலுங்கனா ஆகியவை ஏற்கனவே இந்திய பட்டியலில் இணைந்துள்ளது.
|
இன்று (ஜன.31) பிரபுத்தர பாரதாவின் (Prabuddha Bharata) 125-ம் ஆண்டு விழா அனுசரிக்கப்படுகிறது.
- இது 1896-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கை
|
ஜன.29-ல் இந்திய கல்வி அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs (DEA)) மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவற்றுடன் மத்திய கல்வி அமைக்கத்தின் ஸ்டார்ஸ் எனப்படும் கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துதல் (Strengthening Teaching – Learning and Results for Sates (STARS)) திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிதி உதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 500 மில்லியன் அமெரிக்க டாலரினை (சுமார் ரூ.3700கோடி) கடனுதவியாக உலக வங்கி வழங்கும்.
|
மெக்சிக்கோ இந்தியாவிடமிருந்து 8,70,000 கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உள்ளதாக மெக்சிக்கோ நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார். |
ஜன.28-ல் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் சூழலியல் மாற்றம் அமைச்சர் பார்பரா பொம்பிலி ஆகியோர் இணைந்து இந்திய-பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டு 2021-2020 (Indo-French Year of the Environment over the period 2021-2022) ஐ தொடங்கி வைத்தனர்.
நீடித்த வளர்ச்சியில் இந்திய-பிரெஞ்சு கூட்டை வலுப்படுத்துவதும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவமும் இதன் அடிப்படை ஆகும். |
ஐக்கிய நாடுகளவை “மக்களின் பருவநிலை அறிக்கை” (People’s Climate Report) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய “பருவநிலை மாற்ற கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
- ஐ.நா.வளர்ச்சி திட்டம் மற்றும் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து 50 நாடு மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இவ்வறிக்கையை தயாரித்துள்ளன.
|
போர்ச்சுகலின் அதிபராக ரெபெலோ டி சோசோ மீண்டும் தேர்வானர் |
126 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கல் என்ற சிவன் கோவில் பாகிஸ்தானில் திறக்கபட்டது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் இக்கோயில் உள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் 75 லட்சம் பேர் உள்ளனர். |
இந்தியா வம்சாவளியினர்களான எம்பிக்கள் பிரமிளா ஜெயபால், ராஜாகிருஷ்மூர்த்தி ஆகிய இருவரும் அமெரிக்காவின் முக்கிய இரு நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. |
ஜன. 25 முதல் 29 வரை 2021 உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 51வது பதிப்பு தி டாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2021 (The Davos Agenda 2021) என்ற பெயரில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முக்கியமான ஆண்டு (A Crucial Year to Rebuild Trust) என்ற கருப்பொருளில் நடந்துள்ளது. |
கோவையின் ஸ்ரீ சக்தி பொறியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “ஸ்ரீசக்தி சாட்” என்ற பெயரில் செயற்கைக்கோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.
பிப்.22-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது.
- இஸ்ரோ தலைவர் கே.சிவன் இதற்காக கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட தரைதளக் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
- 460 கிராம் மட்டும் எடை கொண்டது. ஆனால் 10 கிலோ வரை எடையுள்ள நானோ செயற்கைக்கோள் போல் செயல்படும்
- பூமியிலிருந்து 500-575கி.மீ. தூரத்தில் சுற்றுவதால் லியோ செயற்கைக்கோளாகவும் உள்ளது
- ரூ.25 கோடி செலவில் “ஸ்ரீசக்தி சாட் என்று பெயரிட்டு இந்த PSLV C-51 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.
|
பிசிசிஐ செயலர் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இதற்கு முன் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹசன் தலைவர் பதவி வகித்தார்.
|
வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் வசிஷட் விக்னேஸ் சர்வதேச ரூரல் கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஃ பெடரேஷன் சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபாள விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கப்பதக்கம் வென்றார் |
30th January Current Affairs – Read Here
Related Links
Related